Modern technology gives us many things.

மணப்பாறை காகித ஆலை கிணற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு: உறவினர் முற்றுகை

RTI

திருச்சி மணப்பாறை முண்டிபட்டியில் தமிழக 2வது காகித ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் நாளொன்றுக்கு சுமார் 1500க்கும் மேற்பட்டோர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குள்ளம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வன் ட்ராக்ட்டர் ஓட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

BG Naidu

காகித ஆலைக்கு பயன்படும் வகையில் தண்ணீரானது அருகிலுள்ள குளத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. நேற்று குளத்தின் அருகே கலைச்செல்வன் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இரவு வேலை முடிந்து வெகுநேரமாகியும் கலைச்செல்வனை காணாத  சக ஊழியர்கள் வாலிபரை தேடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, நிர்வாகத்தின் சார்பில் மீட்பு குழுவினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது

Ukr new

தகவலறிந்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்து வந்து, கலைச்செல்வன் பணியில் ஈடுபட்ட அந்த குளத்திலும் அதன் சுற்றுபகுதியிலும்  தீவிரமாக தேடியுள்ளனர்.

Sathya

இரவு முழுவதும் தேடியும் வாலிபர் கிடைக்கவில்லை. இன்று காலை குளத்தினுள் மிக ஆழத்தில் இருந்து கலைச்செல்வனது உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து, பெற்றோரும், உறவினர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் காகித ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்., இறந்த இளைஞனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்ககோரி அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இழப்பீடு வழங்கவில்லை எனில் உடலை வாங்க மாட்டோம் எனவும், அவரது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்ந்து, மணப்பாறை வட்டாச்சியர், காவல் துறையினர் மற்றும் குளித்தலை எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், வாலிபரின் உடலை பெற்று பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!