மனித நேயம் இல்லாத ஒரு மருத்துவரின் செயலை கண்டித்து வெளியிடும் பதிவு... நேற்று இரவு 31.07.2020 அன்று இரவு 09.30 மணியளவில் திருச்சி கே. கே நகரைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்டும் நிறை மாத கர்ப்பிணியுமான பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியே தஞ்சாவூர் சாலையில் நடந்து வந்த போது.. அந்த பெண்ணை BHEL கணேசா அருகில் ஒருவன் வண்டியில் வேகமாக வந்து கீழே தள்ளி விட்டு அவன் அங்கிருந்து சென்றுவிட்டான். கீழே விழுந்ததில் அந்த பெண்ணிற்கு முகத்தில்,வயிற்றில் பலத்த அடிபட்டு கொட்டும் மழையில் ரோட்டில் அமர்ந்திருந்த பெண்ணை.. இரவு ரோந்து பணிக்கு அந்த வழியில் வந்த திருவரம்பூர் உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ் அவர்கள் அந்த பெண்ணை 108 க்கு போன் செய்து துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.. அங்கு இரவு பணியில் இருந்த ஒரு மருத்துவர் அந்த பெண்ணிற்கு சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறி அந்த பெண்ணை கொட்டும் மழையில் துரத்தி விட்டார்கள்.. அந்த பெண்ணும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்து நடு ரோட்டில் அமர்ந்து விட்டார்.. அதன் பின் அந்த வழியில் ரோந்து வந்த துவாக்குடி காவல் ஆய்வாளர் காந்திமதி அவர்கள் அந்த பெண்ணை மீட்க அருகே சென்ற போது காவல் உடையை பார்த்து பயந்து கத்தியதால் உடனே காவல் ஆய்வாளர் எனக்கும், வாளவந்தான் கோட்டையைச் சேர்ந்த எமிலினாவிற்கும் போன் செய்து உடனே துவாக்குடி பஸ் நிலையம் அருகே வர சொன்னார்.. நாங்கள் இருவரும் அந்த இடத்திற்கு வந்து அந்த பெண்ணுடன் பேச்சு கொடுத்து சாப்பாடு வாங்கி சாப்பிட வைத்து வேறு உடையை மாற்றி விட்டு, அந்த பெண்ணின் கணவரின் விவரம் கைபேசி எண்ணை வாங்கி அவர் வரும் வரை அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துக் கொண்டு பாதுகாத்து.. அந்த பெண்ணின் கணவர் வந்த உடன் அந்த பெண்ணை அவரிடம் ஒப்படைத்து ..துவாக்குடி காவல் ஆய்வாளர் மற்றும் நாங்கள் மீண்டும் துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்குள்ள மருத்துவர் அந்த பெண்ணிற்கு முதல் சிகிச்சை அளிக்க மறுத்தார்.. அதன் பின் நாங்கள் மருத்துவரிடம் விவாதம் செய்த பின் அங்கிருந்த செவிழியர் அந்தப் பெண்ணின் கருவில் உள்ள குழந்தையின் துடிப்பு உள்ளதா என்று பரிசோதித்த போது துடிப்பு இருப்பதாக தெரியவில்லை என்று கூறி அப்போது கூட அந்த பெண்ணின் அருகில் கூட வந்து பார்க்கவில்லை அங்கிருந்த மருத்துவர்... இப்படி மனநிலை பாதிக்கப்பட்ட நிரை மாத கர்ப்பிணியாக வந்த பெண்ணிற்கு முதல் உதவி சிகிச்சை செய்ய மறுத்த அந்த மருத்துவரின் மனதை என்ன சொல்ல.......அதன் பிறகு இரவு 11.40க்கு அந்த பெண்ணை அவர் கணவருடன் அனுப்பி வைத்தோம். துவாக்குடி காவல் ஆய்வாளர் காந்திமதி அவர்கள் மற்றும் எமிலினா, சாருமதி ..... காவலர் துறையினரும், பொதுமக்களும் ரோட்டில் யாரும் விபத்தில் சிக்கி இருந்தால் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் அரசு மருத்துவர்களையும் நம்பி தானே அனுப்பிகிறார்கள் அவர்களே இப்படி செய்தால் என்ன சொல்ல.....   வழக்கறிஞர் சாருமதி தனது முகநூலில்...