அரியமங்கலம் அருகே  சாலையோரக கடைகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பியதால் வியாபாரிகள் புகார்!

திருச்சி அரியமங்கலம் எஸ் ஐ டி பகுதியில் சாலையோர கடைகளை அகற்றி விட தனியார் நிறுவனம் நோட்டீஸ் அளித்தது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் வியாபாரிகள் புகார் அளித்தனர். திருச்சி அரியமங்கலம் எஸ் ஐடி பகுதியில் சாலையோரம் பல்வேறு வகையான பொருட்களை தரை கடைகள் அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.இவர்களை சுங்க வரி வசூல் செய்யும் தனியார் நிறுவனம் சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, தரைக்கடை வியாபாரிகள் 30 கடைகளில் அப்புறப்படுத்த கோரி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாலையோர வியாபாரிகள் ஒன்று கூடி நற்று மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் சாலையோர கடைகளை அப்புறப்படுத்த கூடாது. கடைகளில் ஒழுங்குபடுத்த சாலையோர வியாபாரிகள் கமிட்டி அமைக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்கிறது. அதேபோல் காலையில் கடை போட்டு விட்டு இரவில் தள்ளு வண்டியில் எடுத்துச் செல்வது ஆக்கிரமிப்பு என சொல்ல முடியாது என சொல்லியிருக்கிறது. இதயெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சாலையோர வியாபாரிகளை நெடுஞ்சாலை சுங்கவரி வசூல் செய்யும் நிறுவனத்தில் இருந்து தினமும் சிலர் வந்து கடையை அப்புறப்படுத்த மிரட்டும் தொனியில் பேசி செல்கின்றனர். எனவே அவர்கள் மீது உரிய கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தை உறுதி செய்திட வேண்டும் மேலும் தொடர்ந்து மிரட்டி கடைகளை அகற்ற முயற்சி செய்ததால் குடும்பத்துடன் தீக்குளிப்போம் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மாநகராட்சி ஆணையர் இதுதொடர்பாக விசாரணை நடத்துவதாக தெரிவித்தார்.