பிளஸ் 1 தேர்வு முடிவுகளில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் 4வது இடம்

பிளஸ்1 தேர்வு முடிவு நேற்று வெளியிட்டதில் திருச்சி மாவட்டம் பத்தாவது இடத்தில் இருந்து நான்காவது இடத்துக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் 32,183 மாணவ மாணவிகள் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதில் 31,356 பேர் தேர்ச்சி பெற்றனர். 14,76 7 மாணவிகளில் 14,208 பேரும் 17,416 மாணவர்களில் 17,148 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 97.43 சதவீதமாகும். கடந்த ஆண்டு மாநில அளவில் பத்தாம் இடத்தில் இருந்த திருச்சி மாவட்டம் இந்த ஆண்டு நான்காவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.