திருவரம்பூர் முதியோர் இல்லத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று !

 

திருச்சியில் 30.07.2020 அன்று அதிகபட்சமாக கொரோனா தொற்று 133 பேருக்கு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில் திருச்சியில் அரசுமருத்துமனையில் சிகிச்சையில் இருந்த 62 வயது முதியவர் சிகிச்சை பலன் இன்றி பலியானார். இது வரை திருச்சியில் 92 பேர் கொரோனா தொற்றினால் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. 

 

திருவரம்பூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் 110 பேர் வசித்து வருகிறார்கள். இவர்களில் ஒருவருக்கு காய்ச்சல் இருந்தததை தொடர்ந்து அவரை பரிசோதனை செய்ததில் கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

 

அவரை தொடர்ந்து அங்கு உள்ள மற்ற அனைவருக்கும் கொரோனோ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 21 பேரையும் அரசு மருத்துவர்கள், சுகாதாரா ஊழியர்கள் அழைத்து சென்று திருவரங்கள் யாத்திரிநிவாஸில் தனிமைப்படுத்தி வைத்துள்ளார்கள்.