திருச்சியில் கொரோனா வைரஸில் இருந்து 109 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்

திருச்சி அரசு மருத்துவமனையில் கரனா வைரஸ் நோய் தொற்று தொடர்ந்து தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 54 பேரும், பெரம்பலூரில் இருந்து 33 பேரும், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து  ஒருவரும் என மொத்தம் 88 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். காஜா மலையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கேவிட்-19 மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்று வந்த திருச்சியை சேர்ந்த 19 பேரும், புதுக்கோட்டையை சேர்ந்த இரண்டு பேரும் என மொத்தம் 21 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார் திருச்சியில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 109 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.