கொரோனா முடிவை விரைவில் அறிவிக்க சிபிஎம் கட்சி வலியுறுத்தியது

திருச்சி மாவட்டத்தில் தினமும் 5000 பேருக்கு சோதனை நடத்த வேண்டும். பரிசோதனை கூடங்களை அதிகரித்து 24‌ மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்க வேண்டும் என‌ ‌‌சிபிஎம்‌ கட்சி வலியுறுதீதியது. மாநகரத்தின் அனைத்து 18 மாநகராட்சி சுகாதார மையங்களிலும் ‌, தாலுகா ‌தலைமை மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்கள் , இரயில்வே, பெல், ஓ எப் டி எஸ் எஸ் எல் சி மருதுவமனைகள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா பரிசோதனைகளை செய்ய வேண்டும், நாளொன்றிற்கு 5000 பேருக்கு பரிசோதனை எடுக்க வேண்டும் பரிசோதனை கூடங்களில் மேலும் அதிகரிக்க வேண்டும், பரிசோதனை முடிவை ஐந்து ஐந்து நாட்கள் வரை தாமதிக்க படுவதால் நோய்த்தொற்றுகள் குடும்பத்திலும் , அருகாமையில் நோய் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சோதனை எடுத்து 24 மணி நேரத்தில் முடிவுகளை அறிவிக்க வேண்டும் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் சுமார் 250க்கும் மேற்பட்ட லாரிகளில் வரும் லாரி ஓட்டுநர்கள் உதவியாளர்களை உரிய முறையில் பரிசோதனைக்கு பின் அனுமதிக்க வேண்டும். என சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.