திருச்சி  மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 26 பகுதிகள் !   திருச்சியில் மாநகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கை மிக தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் முகாம்கள் அதிகரிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  கொரோனோ தொற்று அதிகமான பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு அங்கு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.   கடந்த வாரம் பெரியகடைவீதி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பகுதியாக மாற்றப்பட்டு அங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இறுதியில் கடந்த வாரம் தடை விளக்கிக்கொள்ளப்பட்டது.   தற்போது ஶ்ரீரங்கம் கோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் எதுவும் இல்லை. அரியமங்கலம் கோட்டத்தில் ஏற்கனவே ஏதுவும் இல்லை. தற்போது புதிதாக 3 பகுதிகள் மட்டும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.   கோ.அபிசேஷகபுரம் கோட்டத்தில் ஏற்கனவே 3 இடங்கள் தற்போது 3 இடங்கள் மொத்தம் 6 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.   பொன்மலை கோட்டத்தில் அதிகப்பட்ச எண்ணிக்கையாக 12 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இங்கு மருத்துவ முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்து என்கிறார் மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன்.   திருச்சி மாவட்ட புறநகர் பகுதிகளில் முசிறி ஊராட்சி ஒன்றியம், கரட்டான்பட்டி, சாத்தனூர், திண்ணனூர், கொடுந்துரை ஆகிய பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு 14 நாட்கள் அந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதிகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் நேரடியா சென்று ஆய்வு நடத்தினார். ஆக திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 26 பகுதிகள்  தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.