திருத்தம்
  1. பொன்மலை நகராட்சித் தேர்தலில் திமுக சார்பாக கடலை மிட்டாய் ராமசாமி போட்டியிடவில்லை. அன்றைய பொன்மலை நகர செயலாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவருமான ராமானுஜம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சில பிரச்சனையின் காரணமாக அவரே தலைமையின் எதிர்ப்பை மீறி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் கடலைமிட்டாய் ராமசாமி அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். ராமானுஜத்திற்கு கம்யூனிஸ்டுகளும்தான் கடுமையான போட்டி நிலவியது 99% திமுகவினர் ராமானுஜத்திற்கு தேர்தல் வேலை செய்தனர். செம்பட்டு மற்றும் ஏர்போர்ட் பகுதியில் அதிமுகவிற்கு அதிக வாக்கு கிடைத்ததால் இறுதியில் அதிமுக வேட்பாளர் கடலைமிட்டாய் ராமசாமி வெற்றி பெற்றார்.
  2. பொன்மலை நகரம் என்பது வேறு பொன்மலை நகரியம் என்பது வேறு. பொன்மலை நகரியத்தில் உயர்திரு கண்ணையன் அவர்கள் திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை. பொன்மலை நகரத்திற்கும் அவருக்கும் சம்பந்தம் கிடையாது.
அன்றைய பொன்மலை நகரம் என்பது டிவிஎஸ் டோல்கேட் சுப்பிரமணியபுரம் சங்கிலியாண்டபுரம் செந்தண்ணீர்புரம் பொன்மலைப்பட்டி கொட்டப்பட்டு செம்பட்டு ஏர்போர்ட் பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். அன்றைக்கு 20 வார்டுகள் கொண்டதாக பொன்மலை நகரம் அமைந்திருந்தது. பொன்மலை நகரியம் என்பது தற்போது மாநகராட்சி 32வது வார்டு உட்பட்ட பகுதிகள் மட்டுமே நகரியம் ஆக இருந்தது அதில் 11 வார்டுகள் அடங்கியிருந்தது. நகரியத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் கிடையாது. ரயில்வே நிர்வாகமே தனி தேர்தலை நடத்தி பிரதிநிதிகளை தேர்வு செய்யும். மாநகராட்சி ஆன பின்புதான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முதல் மாமன்ற உறுப்பினராக உயர்திரு ஜெயசீலன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 4.உள்ளாட்சித் தேர்தலின் தலைமையின் உத்தரவுபடி நடக்காததால் பொன்மலை நகர செயலாளர் பொறுப்பிலிருந்து ராமானுஜம் நீக்கப்பட்டு எஸ்ஏ பீர் முகமது என்பவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். ஒரு வார காலத்திற்குள் அவரும் நீக்கப்பட்டு எனது தந்தை நாகவேணி வேலு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2013ஆம் ஆண்டு வரை நகர செயலாளராகவும் பகுதி செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். திருச்சி திமுக வரலாற்று திருப்புமுனை மாநாடு என்று அழைக்கப்பட்ட 1996 ஆம் ஆண்டு கொட்டப்பட்டு நடந்த மாநாடு இவரின் பெரும் பங்களிப்போடு நடைபெற்றது. மேலும், உண்மைகளைத் தெரிந்து எழுத வேண்டும், உரிய ஆதாரங்களோடு எழுதவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று  34வது வட்ட திமுக செயலாளர் நாகவேணி வே. மாரிமுத்து தெரிவித்துள்ளார்.  இவர் குறிப்பிட்டுள்ள திருத்தங்கள் கட்டுரையில் மேற்கொள்ளப்படும் (கட்டுரையாளர்) - ஆசைத்தம்பி