அரங்கனின் நேரடி சேவையை நாம் கண்டு சுமார் 54 நாட்கள் (நன்றி நண்பர் ஸ்ரீரெங்க விலாசம்) ஆகிறது. இதே போல ஒரு நிலையை அரங்கன் மிக சமீபகாலத்தில் சந்தித்து இருக்கிறான் - மனிதர்களுக்கு நேற்று அல்லது போன வாரம், சமீபகாலம் பல ஆயிரம் வருடம் ஸ்ரீரங்கவாசியான அரங்கனுக்கு 250 ஆண்டுகள் என்பது சமீபம்தானே .. தமிழகத்தில் இவ்வளவு கோவில்கள் சிறப்பாக இருக்க 1369 ஆண்டு படையெடுத்து வந்து துலுக்கர்களை விரட்டிய விஜயநகர அரசர்களும் மற்றும் அவர்கள் வழி தோன்றல்களான நாயக்க மன்னர்களும் .. மறுபடி ஆற்காடு நாவபுகளின் தொல்லைகளில் இருந்து நம்மை காப்பாற்றியவர்கள் சத்ரபதி சிவாஜி வழிதொன்றல்களான மராட்டியர்களே !! 1736 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு நிறைய சோதனைகள் வந்தன.. காரணம் அப்போதுதான் தமிழகம் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிபிடிக்க நடந்த சண்டையில் ரண களம் ஆனது .. 1736 ஆண்டு கடைசி நாயக ராணி மீனாட்சி, சந்தாசாஹிப் என்கிற ஆற்காடு நாவப்பினால் ஆட்சி இழந்து தற்கொலை செய்து .. நாயக்க ஆட்சி முடிந்து மறுபடி தமிழகம் துலுக்கர்கள் ஆட்சியின் கீழ் வந்தது !! சந்தாசாஹிப் ஸ்ரீரங்கத்தை அடிக்கடி மிரட்டி பல லட்சம் ரூபாய் பணத்தை கப்பமாக பிடுங்கி கொண்டான் .. இவனது கொடுமையால் ரங்கநாதர் தனது பூபால ராயன் என்கிற சிம்மசனத்தில் இருந்து வெளியில் எழுந்தருளவில்லை என்று கோவில் ஒழுகு கூறுகிறது ..
பூபாலராயன் என்பது நீங்கள் காணும் கருவறையில் உத்சவர் எழுந்தருளி இருக்கும் தங்க சிம்மாசனம் .
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1250-84) முதல் முதலாக ஒரு தங்க சிம்மாசனம் அரங்கனுக்கு அளித்து அதற்க்கு பூபாலராயன் என்று பெயரிட்டான் .. ஆனால் அவன் அளித்த ஒரு கிராம் பொருள் கூட இன்று கோவிலில் இருக்க வாய்ப்பில்லை காரணம் அதற்கு பிறகு 1311 மற்றும் 1323 ஆகிய இரண்டு துலுக்கர் படையெடுப்பில் அனைத்தும் களவு போய் கோவில் கோபுரங்கள் இடிந்து கிடந்ததாக பின்னர் 1369 படையெடுத்து மீட்ட வீர கம்பண்ண உயையாரின் மனைவி கங்கமாதேவி மதுரா விஜயம் என்கிற நூலில் எழுதி இருக்கிறார் .. பின்னர் திருமலையப்பன் என்கிற நாயக்க அரசன் நம்பெருமாளுக்கு தங்கத்தால் ஆன சிம்மாசனம் அளித்து அதே பெயரில் அது வழக்கப்பட்டு வருகிறது.. பின்னர் பலவாறு இந்த சிம்மாசனம் பல நூற்றாண்டுகள் சீர் செய்யப்பட்டு தங்கம் சேர்ந்தும் இன்றும் பொலிவுடன் காணப்படுகிறது !!! மீனாட்சி (இவர் விஜயரங்க சொக்கநாதர் மனைவி) இவர்களது முழு உருவ தந்த உருவ சிலைகளை நீங்கள் கோவிலின் உள்ளே கண்ணாடி கூட்டுக்குள் கண்டு இருப்பீர்கள்.. அந்த பெண்மணியின் கணவன் இறந்து பல அபத்தமான முடிவுகள் காரணமாக அவளும் தற்கொலை செய்து கொண்டும், தமிழகம் பல அரசர்களின் வேட்டைக்காடாக மாறி ஸ்ரீரங்கத்தின் உள்ளே பல படை வீரர்கள் தங்கும் இடமாக மாறியது ..
அன்றைய 1700 ஆண்டுகளில் தமிழகத்திலேயே ஏழு அரண் மற்றும் இரண்டு புறமும் வருடம் முழுவதும் நீர் பெருக்கெடுத்து ஓடும் ஒரே கோட்டை கொண்ட அரண்மனை ஸ்ரீரங்கம் மட்டுமே ..
எங்கே சண்டை நடந்தாலும் அவர்கள் தங்களை காத்துக் கொள்ள தேடி ஓடி வந்த இடம் ஸ்ரீரங்கம் கோட்டையே !!! இன்றைய ராஜகோபுரம் அடுத்த பகுதி அன்று மிக பிருமாண்ட மைதானமாக .. பல ஆயிரம் போர் வீரர்கள் மற்றும் சிறை சாலை, மருத்துவ மனை போன்றவற்றை கொண்ட இடமாக இருந்தது!! 1736 இல் இருந்து 1742 வரை ஆட்சி செய்த கொடுங்கோலன் சந்தாசாஹிப்புவை மாராட்டிய படைகள் திருச்சி வந்து அடிச்சு பிடிச்சு கைது பண்ணி சத்தாராவில் சிறை வைத்து நமது ஸ்ரீரங்கம் பகுதியை மீட்கும் வரை .. சுமார் ஏழு ஆண்டுகள் ரெங்கநாதர் தனது பூபாலராயன் சிம்மாசனத்தில் இருந்து வெளியில் வரவில்லை என்று கோவில் ஒழுகு தெரிவிக்கிறது .. இன்று காணும் அடையவளஞ்சான் திருவீதி முழுவதும் 1736 இல் இருந்து 1792 வரை நிறைய போர் வீரர்கள் தங்கி இருந்த இடமாக இருந்தது. தொடரும்....