ஸ்ரீரங்கத்தில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் அந்தப் பகுதியில் உள்ள பக்தர்கள் தங்கள் விடுதியாக யாத்ரி நிவாஸ் கொரோனா தடுப்பு சிறப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

திருச்சியில் ஒட்டுமொத்தமாக 506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 302 பேர் குணமாகி தற்போது இருநூறு பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சிகிச்சை பலனின்றி 4 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . குறிப்பாக கிராமங்களை விட மாநகராட்சி பகுதியில் கொத்து அதிகமாக இருந்து வருகிறது.

திருச்சி மாநகராட்சியில் கோட்ட வாரியாக அதிகபட்சமாக ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 110 பேர் , அபிஷேகபுரம் கோட்டத்தில் 91 பேர், பொன்மலை கோட்டத்தில் 82 பேர், அரியமங்கலம் கோட்டத்தில் 71 பேர், என மாநகராட்சி பகுதியில் மட்டும் 344 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது . மொத்தம் 195 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் .

தற்போது 146 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் . திருச்சி புறநகரில் ஒன்றியங்கள் வாரியாக மணப்பாறை 27, மருங்காபுரி 24 ,மணிகண்டன் 23, மண்ணச்சநல்லூர் 19 ,லால்குடி 14, உள்ளிட்ட 14 ஒன்றியங்களில் 160 தோற்று உறுதி செய்யப்பட்டு இவர்களில் 105 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் .

தற்போது 52 பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சீரங்கம் கொள்ளிடம் கரையில் அமைந்துள்ள யாத்ரி நிவாஸ் தடுப்பு மையமாக மாற்றப்பட்டுள்ளது . இன்று முதல் கட்டமாக 32 பேர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மொத்தம் 400 பேர் தங்கும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.