திருச்சியில் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலி.. திருச்சி கருமண்டபம் பகுதியை சேர்ந்தவர் சின்னு இவரது மகன் முருகன் (வயது 46) என்பவர் இன்று மதியம் தாங்கள் குடியிருக்கும் வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.. மேலும் அருகில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் அளித்ததுடன் இதுதொடர்பாக கண்டோன்மெண்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தந்துள்ளனர் இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு மேற்படி உடலை மீட்டு மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்