திருச்சி என்ஜினீயர் தற்கொலை !   திருச்சி கருமண்டபம் சோதனைச்சாவடி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அப்துல்கரீம், இவருடைய மகன் மாலிக்பைரோஸ் என்ஜீனியரான இவர், மாலத்தீவுக்கு சென்று அங்கு பணியாற்றி வந்தார்.   கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊர் வந்தார். இந்த நிலையில் 20.05.2020 அன்று இரவு வீட்டில் தூங்க சென்ற அவர் தற்கொலை செய்து கொண்டார். காலையில் அவர் பிணமாக தொங்கியதை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.   தகவல் அறிந்த செசன்ஸ் கோர்ட்டு போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முதல் கட்ட போலிஸ் விசாரணையில் மாலிக் பைரோஸ் வேலைக்கு செல்லாததால் பெற்றோருக்கு எதுவும் செய்ய முடியவில்லை என்று மன வருத்தத்தில் இருந்ததாகவும் அதனால் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.