திருச்சியின் புதிய நுண்ணறிவு பிரிவு ஆணையர் இராமசந்திரன்  !   தமிழக காவல்துறையில் நுண்ணறிவு பிரிவு மிகவும் முக்கியமான துறை. இந்த பிரிவு போலிசார்  போலிஸ் ஸ்டேஷனில் உள்ள இன்ஸ்பெக்டர் முதல் ஏட்டு வரை அவர்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதே முக்கியமான வேலையாகும். அந்த ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் ரவுடிகள், குற்றவாளிகள், ஆர்பாட்டம், போராட்டம், நடக்கும் முன்பே அவைகளை தெரிந்து கொண்டு மாநகரில் உள்ள உயர் காவல்துறை அதிகாரிக்கு உடனே அறிக்கை அனுப்ப வேண்டும். இந்த பிரிவில் இன்ஸ்பெக்டர், உதவி ஆணையர் ஆகியோர் பணியில் இருப்பார்கள். இந்த நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் பதவிக்கு போட்டியாக தமிழகத்தில் உள்ள பல்வேறு உதவி ஆணையர்கள் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் இராமசந்திரன், பொன்மலை ஏசி பாலமுருகன், வல்லம் ஏசி சீத்தாராமன், மதுரையில் உள்ள உதவி ஆணையர் அருள், கீரனூர் பிரான்சிஸ், என பெரிய பட்டியலே இருப்பதால் இவர்களுக்கு கடுமையான போட்டிகள் இருந்ததால் ஒரு இறுதி முடிவு உடனே எடுக்க முடியாமல் தற்காலிகமாக சிசிர். ஆபியில் உள்ள வீரமணி என்பவரை கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்தனர்.   இந்த நிலையில் இன்று அதிகாலையில் 2 மணி அளவில் திருச்சி நுண்ணறிவு பிரிவுக்கு இராமசந்திரனும், ஶ்ரீரங்கத்திற்கு கியு பிரி மணிகண்டனும் நியமிக்கப்பட்டுள்ளர்.  ஒரு வழியாக ஐஜி வரதராஜீ, மத்திய மண்டல ஐஜி அமலராஜ் ஆகியோர் சிபாரிசில் நியமிக்கப்பட்டுள்ளார்.