திருச்சி அரசு மருத்துவமனையில் துப்புரவு வேலைக்கு ரோபோ !   திருச்சியை சேர்ந்த  தனியார் நிறுவனம் கொரோனா‌ நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு பயன்படும் வகையில் ஜாஃபி‌ என்ற ரோபோவினை வடிவமைத்து சாஸ்த்ரா‌ பல்கலைக்கழகம் உதவியுடன் அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக கொடுத்தனர். கொரோனா வார்டுகளில் பணி புரியும் துப்புரவு பணியாளர்ளுக்கு உதவியாக இரண்டு புதிய ரோபோக்களை  உருவாக்கியுள்ளனர். ஜாஃபி‌ க்லீன்‌‌ என பெயரிட்டுள்ளனர்.  இந்த ரோபோ  20 லிட்டர் கொள்ளளவு கொண்டு கிருமிநாசினி தானாக தெளிக்கும் விதமாகவும்‌‌ கொரோனா நோயாளிகள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடங்களை துடைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ‌ஜாஃபி‌ ஸ்டெர்லைஸ் என்ற ரோபோ UV விளக்குகளைக் கொண்டு நோய் அபாயம் உள்ள அறைகளில் கொரோனா பரவுதலை முற்றிலும் தடுக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.