திருச்சியில் சாலையோரம் வசிப்பவர்கள் அடுத்தடுத்து மரணம் !   கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலே தனித்து இருக்க சொல்லி அரசாங்கம் தொடர்ந்து அறிவிப்பு கொடுத்துக்கொண்டே இருக்கிறது.   ஆனால் வீடு, உறவினர்கள் என எதுவும் இல்லாமல் சாலையோரங்களில் பலர் வாழ்ந்து வருகிறார்கள்.   மக்கள் நலன் விரும்பிகள் யாரேனும் கொடுக்கும் உணவுக்காக காத்திருந்து சாப்பிட்டு தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள்.   இப்படி சாலையோரம் வசிப்பவர்களின் உடல் நலம், மருத்துவ உதவி, கொரோனோ பரவி உள்ளதா, மாஸ்க் அணிகிறார்களா ? தனித்து இருக்கிறார்களா ?  என்பது  எல்லாம் கேள்விக்குரியான நிலையில் தான் இருக்கிறது. இவர்களை கண்காணிக்க அல்லது கவனிக்க அரசாங்கமோ ! அல்லது தனியார் தொண்டு நிறுவனங்கள் முன் வரவேண்டும்.   திருச்சியில் சாலையோரம் வசிப்பவர்களில் தற்போது திருச்சியில் இறந்து வருகிறார்கள். திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று  21.05.2020  காலை இறந்து கிடந்தார்.   மேலும் தகவல் அறிந்த கன்டோன்மென்ட் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து அவரது உடலை மீட்டு திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.   மேலும் இறந்த நபரை பற்றி தகவல் தெரிந்தால் தகவல் தெரிவிக்க வேண்டி கவர்மெண்ட் காவல் நிலையத்தை அணுகுமாறு கேட்டுள்ளனர்.   மேலும் அரிஸ்டோ ரவுண்டானா இப்பகுதியில் ஏற்கனவே இரண்டு வாரத்திற்கு முன்பு இதேபோன்று சாலையோரத்தில் வசித்து வந்த பெண்ணொருவர் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.