திருச்சி வருவாய் ஆய்வாளர் விபத்தில் பலி ! திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தொட்டியம் பகுதி வருவாய் ஆய்வாளர் சேகர் அவர்கள் கொரோனா பணி நிமித்தமாக நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் தொட்டியம் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் . அங்கு சிகிச்சை பலனளிக்காமல் திருச்சி அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்றார் சிகிச்சை பலனின்றி காலமானார் தொட்டியம் பகுதி வருவாய் ஆய்வாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானதால் தொட்டியம் காவல்துறை வழக்குப் பதிந்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்