பெரிய கோவிலில் பக்தர்கள் யாரும் இன்றி நடைபெற்ற பிரதோஷ வழிபாடு உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை வரும் பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெறும்.                           கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 64 நாட்களாக பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லாததால், பக்தர்கள் இன்றி வெறிச்சோடி நிலையில் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இதில் பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், அரிசிமாவு பொடி, இளநீர், தேன், உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, நந்தியம்பெருமானுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது.