திருச்சி பல் மருத்துவமனையில் தீ திருச்சி  சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியை சேர்ந்த மஹாலெட்சமி பல் மருத்துவரான  இவர் அதே பகுதியில் நடராஜன் என்ற  பல் மருத்துவமனை நடத்தி வருகிறார் . உணவு இடைவேளைக்காக மருத்துவமனையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார் அப்போது  மருத்துவமனையில் உள்ள மின் இணைப்பு பெட்டியில் இருந்து தீ பிடித்தது சிறிது நேரத்தில் தீ மளமளவென மருத்துவமனை முழுவதும் பற்றி எரிய துவங்கியது தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் தீ அணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அனைத்தனர். இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் உள்ள கணினி உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் முற்றிலும் எரிந்து நாசமடைந்தது . இதன் மதிப்பு சுமார் 1 லட்சம் என கூறப்படுகிறது . இது குறித்து கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.