அம்மா இல்லாமல் அனாதையாய் நிற்கும் உணவகங்கள்

0
ntrichy

அந்த காலத்தில் ஊர் தோறும் சத்திரங்கள் இருந்தன. அங்கு வெளியூர் மக்கள் இளைப்பாறி, தங்களது பயணக்களைப்பை போக்கிக்கொண்டனர். உள்ளூர் மக்களில் சிலரும் இதனால் பயன் பெற்றனர். இந்த சத்திரம் நேரடியாக அரசரின் பார்வையில் இருந்தது. அதாவது அரசர் இதனை மேற்பார்வை செய்தார். இதற்கு அவரால் முடியாவிட்டாலும் அவரது பிரதிநிதிகள் வந்து பார்வையிட்டு சென்றனர். அங்கு 24 மணி நேரமும் உணவும், தாகத்திற்கான தண்ணீரும் கிடைக்கும்.

இதனை கருத்தில் கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை சாந்தோமில் 2013-ல் அம்மா உணவகத்தை நிறுவினார். இதனை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மேலாண்மையின் கீழ் விட்டார். இதற்கான நிதி மாநகராட்சி பொதுநிதியில் இருந்து வழங்கப்பட்டது. உணவின் தரத்தை துப்புரவு ஆய்வாளர்களும், வரவு-செலவு கணக்குகளை வருவாய்த்துறை அலுவலர்களும் கவனித்தனர்.

இந்த உணவகங்கள் திருச்சி மாவட்டத்திலும் தொடங்கப்பட்டது. கோட்ட வாரியாக பொன்மலையில் 2, அரியமங்கலத்தில் 3, ஶ்ரீரங்கத்தில் 2, கோ-அபிஷேகபுரத்தில் 3  என 10 உணவகங்கள் திறக்கப்பட்டன.

மிகச்சிறப்பாக இயங்கி வந்த இந்த உணவகங்கள் அம்மா அவர்கள் மறைவிற்கு பின் தற்போது சரிவர இயங்குவதில்லை.

உள்ளாட்சி நிர்வாகம் செயல்பாட்டில் இருந்த போது உணவகங்களுக்கு தேவையான பொருட்கள் கோட்ட வாரியாக அந்தந்த உணவகங்களுக்கே வேனில் சென்று வழங்கப்பட்டது.

தற்போது உணவகங்களுக்கு தேவையான பணத்தை மாநகராட்சி நிர்வாகம் சரிவர தருவதில்லை. மாநகராட்சி அதிகாரிகள் அம்மா உணவகங்களை புறக்கணித்து வருகின்றனர். பொருட்களும் சரிவர வழங்கப்படுவதில்லை.உணவும் தரமில்லாமல் போய்விட்டது.

முன்னர் அந்தந்த பகுதியின் கவுன்சிலர்கள் அம்மா உணவகத்திற்கு அவ்வப்போது சென்று வந்தனர். உணவும் தரமாக இருந்தது. ஒரே மாதிரியான உணவு என்று  மக்கள் புறக்கணிப்பதாக கூறுகின்றனர். வெரைட்டிஸ் வழங்கவேண்டுமெனில் நிதிப்பற்றாக்குறை.அதனால் தற்போது உணவகத்தில் விற்பனை குறைவு. செலவு அதிகம் அதாவது ரூ.100 வருமானம் எனில் ரூ.300 செலவு. இந்தகைய நிலை நீடிப்பின் அம்மா உணவகங்கள் மூடும் நிலை உருவாகும்.

அம்மா தொடங்கிய இத்திட்டத்தை கவனிப்பார்களா? அம்மா வழித்தொண்டர்கள்.

 

Leave A Reply

Your email address will not be published.