துறையூரில் போதிய இடவசதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

0
ntrichy

திருச்சி மாவட்டம், துறையூரை சுற்றியுள்ள 280க்கும் மேற்பட்ட கிராமத்தில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட அரசு பேருந்துகளும், 50க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் தினமும் இயக்கப்படுகின்றன.

தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் துறையூர் பேருந்து நிலையத்தில் போதிய இடவசதி இல்லாத காரணத்தால்,  ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனியாக கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, உட்காரும் இடவசதி இல்லாது கால்கடுக்க நிற்கின்றனர். அதுமட்டுமின்றி திறந்த வெளி சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. வாகனம் வந்து செல்லும் நேரத்தை காட்டும் கால அட்டவணை இல்லாதது ஒரு பெரிய குறையாக உள்ளது. கடந்த பத்து வருடங்களாக மக்கள் இவ்வாறு அவதியுற்று வருகின்றனர். 2 தேர்தல்களும் வந்து விட்டது. ஆனால் எந்த ஒரு மாற்றமும் ஏற்பட வில்லை.

வாகனங்கள் அதிகளவில் வந்து செல்வதில் சிரமம் இல்லாமல் இருக்கவும், பயணிகள் நலன் கருதியும், இருசக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், அரசு பேருந்துகள் நிறுத்தம் என தனித்தனியே அமைக்கப்பட்ட போதிய இடவசதியுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

 

Leave A Reply

Your email address will not be published.