காத்திருக்கிறோம் ராகுல்…

0
நம்ம திருச்சி-1

ராகுல்…

கருப்பு மேல்சட்டையும், ஊதா பேண்ட்டும் அணிந்து இன்முகத்தில் புன்னகையுடன், பாக்கெட்டில் கை வைத்தபடி இயல்பாய் நின்றீர்களே, எதோ பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோழமையில் …
அது பிடித்தது…

சார் என்று விளித்த மாணவியை ராகுல் என்று அழையுங்கள் என்றீர்களே… அது பிடித்தது…

கேள்வி கேட்க நின்றிருந்த மாணவியை எப்படி இருக்கிறீர்கள் என்று நலம் விசாரித்தீர்களே …
அது பிடித்தது….

கேட்ட கேள்விகளுக்கெல்லாம் குரலை உயர்த்தி நாடக பாணியில், கையை உயர்த்தி கத்தாமல், அமைதியாக, பொருத்தமாக, அதேசமயம் ஆழமான பதிலை சொன்னீர்களே…
அது பிடித்தது….

வதேராவைப் பற்றி வைத்த கேள்விக்கு, சட்டத்தின் முன் அனைவரும் சமம்.அதை விசாரிப்பதில் எங்களுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றதுடன்,.ரபேல் விவகாரத்தை சரியான இடம் பார்த்து நீங்கள் பொருத்திப் பேசினீர்களே…
அது பிடித்தது…

மோடியை கட்டிப் பிடித்தீர்களே என்றதற்கு, அவர் மிகவும் கோபமாக வெளிப்பட்டார், என்னை, என் தந்தையை, பாட்டியை கொடூரமானவர்கள் என சித்தரித்தார், அவருக்கு இந்த உலகின், மனிதர்களின் அழகான பக்கங்களை பார்க்கத் தெரியவில்லை, எனவே என் பங்கிற்கு அன்பு தான் பதில் என்பதற்காக கட்டிப் பிடித்தேன் என்று இளைய தலைமுறை முன் அழகாக விளக்கம் கொடுத்தீர்களே…
அது பிடித்தது…

அம்மாவிடம் பெற்ற மனிதாபிமானம் என்ன என்று கேட்ட மாணவியிடம், பணிவு என்று தயங்காமல் கூறிவிட்டு, நீங்கள் உங்கள் அம்மாவிடம் கற்றது என்ன என்று மாணவியை திருப்பிக் கேட்டீர்களே…
அது பிடித்தது…

Selfie எடுத்ததற்காக அலைபேசியை தட்டி விட்ட பெரியய்ய மனிதர்கள் வாழும் ஊரில் தாரளமாக மாணவியருடன் எந்த தடையும் இல்லாமல் சிரித்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டீர்களே …
அது பிடித்தது…

இந்த அரசியலில், பச்சா (சிறு பிள்ளை) என்று உங்களை நினைத்த, பேசிய அத்தனை பேரையும் முட்டாளாக்கினீர்களே…
அது பிடித்தது….

காத்திருக்கிறோம் ராகுல்…

விடிவெள்ளி முளைக்கட்டும்…
கைகள் உயரட்டும்.

Leave A Reply

Your email address will not be published.