திருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

0
ntrichy

திருச்சி காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருச்சியில் நூற்றாண்டு பழமைவாய்ந்த காந்தி மார்க்கெட் இயங்கி வருகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த மார்க்கெட் கல்லிக்குடி பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது.இந்நிலையில் காந்தி மார்க்கெட்டில் இயங்கி வரும் வெங்காய மண்டியை அதன் உரிமையாளர்கள் பழைய பால்ப்பண்ணை பகுதியில் இடமாற்றம் செய்துள்ளனர்.அங்கு காந்தி மார்க்கெட்டில் பணி புரிந்த பணியாளர்களுக்கு பணி வழங்காமல் புதிதாக ஆள் சேர்த்துள்ளதாக குற்றம்சாட்டியும் அங்கு நீண்ட காலமாக பணி புரிந்தவர்களுக்கு தான் வேலை வழங்க வேண்டும், சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி காந்தி மார்க்கெட் சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டமைப்பினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.