வேன் திருட்டு: 3 பேர் கைது

0
ntrichy

கடந்த வாரம் கைலாஷ் நகரில் மரியதாஸ் என்பவரது டூரிஸ்ட் வேன்  மர்மநபர்களால் திருடப்பட்டது.அவர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் தனது வண்டியை காணவில்லை என புகார் அளித்தார். இதனை கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் கண்டறிந்த போலீசார் அந்த வாகனத்தை மீட்டனர். ஆனால் குற்றவாளிகளை கைது செய்ய இயலவில்லை.

மேலும் திருவெறும்பூரைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன் கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த தனது வேனை காணவில்லை என்று திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த  திருட்டையும் கண்காணிப்பு கேமராப் பதிவுகளின் மூலம் கண்டறிந்து அவன் திருப்பூர் மதுபானக்கடையில் வேலை செய்து வருவதாக தெரிந்து கொண்டு அந்த இளைஞனை பிடித்து விசாரித்ததில் அவன் பட்டுக்கோட்டை நம்பிவயலை சேர்ந்த உதயா என்ற உதயநிதி(21) என்பவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த சில மாதங்களாக இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்களை திருடி வந்தது தெரியவந்தது. இவன் மேல் கந்தர்வகோட்டை, தஞ்சை ஆகிய காவல்நிலையங்களில்  6 வழக்குகள் இருப்பது தெரியவந்தது. அவனும் அவனது கூட்டாளிகள் 2பேர் சேர்ந்து கொண்டு வேன் மற்றும் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. அவர்களிடமிருந்து மினி வேனையும் 3 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் உதயநிதியை 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

Leave A Reply

Your email address will not be published.