காதலர் தினம்- மக்கள் கருத்து

0
ntrichy

காதலர் தினம்- மக்கள் கருத்து

டேவிட்- செல்வா (கல்லூரி மாணவர்கள்)

நாங்க ரொம்ப நல்ல பசங்க .எங்க கேங்ல எல்லாருமே சிங்கிள் பசங்க தான் லவ் பன்றதுலாம் வேஸ்ட். அம்மாகும் பிள்ளைங்களுக்கும் இடையில் இருக்கிறது தான் காதல். மத்தவங்க மேல வர்றதெல்லாம் ஒரு விதமான ஈர்ப்பு தான். ஒரு பொண்ணு பின்னாடி கஷ்டபட்டு அலைஞ்சு திரிஞ்சு கடைசில அவ ஒத்துக்கமாட்டா. நம்ம அதை காதல்ன்னு நினைச்சு இருப்போம். ஆனா அவங்க அத ஒரு பொழுதுபோக்கா நெனைச்சிட்டு நம்மல விட்ருவாங்க. ஷாஜகான் தாஜ்மகால் கட்டுனாரு, பொண்ணுங்க அது மாதிரி எதாவது கட்டி இருகாங்களா. இதுக்கு நாங்க பசங்க கூட சுத்திட்டு சந்தோசமா இருந்துட்டு போய்ருவோம்.

பூர்ணிமா (காதல் திருமணம் செய்துகொண்டவர்)

நாங்க பத்து வருசமா லவ் பண்ணுனோம் அப்பறம் வீட்ல அரேஞ்ச் பண்ணி கல்யாணம் பண்ணோம். எங்க பையன் காதலர் தினம் அன்னைக்கு தான் பிறந்தான்.

பாரத்-யோகேஷ் (நண்பர்கள்)

காதலர் தினம் அன்னைக்கு தான் காதலை கொண்டாடனும்னு இல்லை. மத்த எல்லா நாளும் நமக்கு காதலர் தினம் தான். அன்னைக்கு வெளில போய் மாட்டிகிறத விட, மத்த நாள்ல போலாம். இந்துமுன்னணி அமைப்புல வேற கல்யாணம் பண்ணி வக்கிறாங்கலாம், எதுக்கு?! அன்னைக்கு போய் மாட்டிகிட்டு, வீட்லயும் மாட்டிகிட்டு தேவையா.வருசத்துல மீதி 364 நாள் இருக்கு, அன்னைக்கு எதுக்கு போய் மாட்டிக்கணும்.

சரவணன்(ஆட்டோகாரர்)

நான் லவ் பண்ணாத்தான அத பத்தி யோசிக்கனும். இந்த தினம் தேவையே இல்லாதது. நாளைக்கி சாப்பாட்டுக்கு என்ன பன்றதுன்னுதான் பாக்கனும். நாளைக்கு நம்ம உயிரோட இருப்போமான்னே தெரியாது. போற வழில அடிபட்டு செத்தா என்ன பன்றது, கரண்ட் கம்பி தலைல விழுந்து செத்தா, இதெல்லாம் தேவையா? அப்பா, அம்மா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறது தான் சந்தோசம்.

சாகித் –(வட இந்தியர்)

எனக்கு காதலர் தினமே தெரியாது, காதலர் தினம்ன்னு ஒன்னு இருக்கிறதே நீங்க சொல்லி தான் தெரியும்.

 

Leave A Reply

Your email address will not be published.