உய்யகொண்டான் வாய்க்கால் தடுப்பு சுவர் இடிந்தது

0
ntrichy

திருச்சி மாநகராட்சி சார்பில் சாலையோரத்தில் ஜிம், நடைபாதைகள் அமைக்கப்பட்டு மக்களது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அந்த வகையில் திருச்சி கோர்ட் எம்.ஜி.ஆர். சிலையில் இருந்து தென்னூர் செல்லும் வழியில் மாநகராட்சி சார்பில் திறந்தவெளி உடற்பயிற்சியுடன் கூடிய நடைபாதையை ஒட்டியுள்ள பக்கவாட்டு சுவர் (3 அடி வரை சுமார் 50 மீட்டர் நீளத்திற்கு உய்யகொண்டான் வாய்க்கால் மேல் அமைக்கப்பட்டிருந்த ) நேற்று பெய்த மழையினால் இடிந்து விழுந்தது. இதனால் அங்கு நடைப்பயிற்சியில் இருந்தவர்கள் அலறிஅடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். நடைபாதை மற்றும் சுவர் தரமான சிமெண்ட்டால் கட்டப்படாமல் இருந்ததால் இவ்வாறு நிகழ்ந்தது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

சிமெண்ட் தடுப்புச்சுவர் மீது இரவு நேரங்களில் நடைபயணம் செல்வோர் உட்கார்ந்து இளைப்பாறி செல்வர். நல்லவேளை இந்த விபத்து நடக்கும்போது உயிர்ச்சேதம் ஒன்றும் ஆகவில்லை. எனவே மாநகராட்சி இந்த தடுப்பு சுவரை தரமான கான்கிரீட்டால் அமைத்து பின் நடைபாதையை அமைத்தால் மக்களுக்கு எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாது என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து.

 

Leave A Reply

Your email address will not be published.