சுயநலமற்ற சேவை மற்றும் ஆளுமைத்திறன் உடைய பெண்கள்

0
நம்ம திருச்சி-1

புனிதசிலுவைகல்லூரியில் சர்வதேசமகளிர் தினமானது கடந்த 8ம் தேதி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ரமோன் (Ramon) மாக்சேசேவிருது பெற்றவரும் ஒருங்கிணைந்த கிராம முன்னேற்ற திட்டத்தின் நிறுவனரும் தலைவருமான குழந்தைபிரான்சிஸ் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார்.

புனிதசிலுவைகல்லூரியின் செயலர் அருட்சகோதரி. நிரஞ்சனா அந்தோணிசாமி தலைமை வகித்து சிறப்புவிருந்தினருக்கு பொன்னாடை கொடுத்து கெளரவித்தார்.  கல்லூரியின் முதல்வர் முனைவர்.அருட்சகோதரி கிறிஸ்டினா பிரிட்ஜெட் முன்னிலை வகித்து நினைவுபரிசு வழங்கினார். பெண்களின் முன்னேற்றம் சம்பந்தமான பல கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினரான குழந்தைபிரான்சிஸ் பெண்களின் சுயநலமற்ற சேவை மற்றும் ஆளுமைத்திறனின் அவசியம் குறித்து பேசினார்.  பெண்களின் சாதனையை போற்றும் வகையில் மூன்று பெண்சாதனையாளர்களான செல்வி.ராஜேஸ்வரி, செல்வம் மற்றும் இந்திராணி ஆகியோருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர். முன்னதாக தமிழ்துறை பேராசிரியை முனைவர்.லதா அனைவரையும் வரவேற்றார்.கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து பொருளியல்துறை பேராசிரியர் முனைவர்.மரியசோபியா நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் 4500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர். நிகழ்ச்சியானது மதியம் 1 மணியளவில் முடிவடைந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பொருளியல்துறை, சமூகபணித்துறை மற்றும் மகளிரியல் மைய பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.