குண்டர் சட்டத்தில் டூவீலர் திருடன் கைது

0
ntrichy

நேற்று மாலை கோட்டைப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படியாக டூவீலரில் வந்த ஷேக் தாவூத்தை கைது செய்தார். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடமிருந்து இரண்டு  டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவன் மேல் ஏற்கனவே பாலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் 3 டூவீலர் திருட்டு வழக்குகளும் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது.

காலையில்  பட்டவொர்த் சாலையில் உள்ள பழையபேப்பர் கடையில் இருந்த சிவக்குமாரிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆயிரம் ரூபாயை பறித்து சென்றதும் அவன்தான் என்பதும் தெரியவந்தது. இதனால் அவன் மீது வழக்கு பதிவு செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் அவனை கைது செய்ய மாநகராட்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.