திருச்சி புதிய வெங்காயமண்டி விரைவில் செயல்பாட்டுக்கு வரும் சுமை தூக்கும் கூலித்தொழிலாளர்கள் சங்கத்தலைவர் நம்பிக்கை

0
ntrichy

திருச்சி, திண்டுக்கல் மதுரை சர்வீஸ் ரோடு, பழைய பால்பண்ணை அருகே சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய வெங்காயமண்டி தொழிலாளர்கள் பிரச்சனைக்கு உட்பட்டு இருக்கும் நிலையில், இந்த வெங்காயமண்டி விரைவில் மக்கள் செயல்பாட்டிற்கும் வரும் என திருச்சி மாவட்ட சுமை தூக்கும்
கூலித்தொழிலாகள் சங்க தலைவர் கந்தன் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 03.06.2018 திருச்சி பழைய பால்பண்ணை அருகில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோரால் திறந்து வைக்கப்பட்ட புதிய வெங்காயமண்டியை பணியாளர்களை வேலை செய்யவிடாது கடந்த 8ம் தேதி இரவு மார்க்கெட் பகுதியில் பணிபுரியும் சிறு தொழிலாளர்கள் ஓரிரு உரிமையாளர்கள் எங்களை மிரட்டும் தோனியில் செயல்படுகின்றனர். இதில் கலந்து கொண்ட அனைவரது சிசிடிவி பதிவுகள் காவல்துறை யில் சமர்பித்துள்ளோம்.

இப்பிரச்சனை தொடர்பாக கடந்த 11ம் தேதி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளோம். மேலும் ஏ.சி.ல் அதிகாரிகளின் விசாரணையிலும் கலந்து கொண்டோம். இது குறித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினரிடமும் முறையிட்டள்ளோம். அவரும் எங்களின் கோரிக்கை நியாயமானது என தெரிவித்துள்ளார். எனவே, விரைவில் புதிய வெங்காயமண்டி நல்ல முறையில் செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave A Reply

Your email address will not be published.