திருச்சி திருச்சி மாவட்டத்தில் குறுவை சாகுபடி தொகுப்பு நுண்ணீர் பாசன திட்ட பணிகள்

0
ntrichy

திருச்சி மாவட்டத்தில் குறுவை தொகுப்பு, நுண்ணீர் பாசன திட்டம் பணிகள் குறித்து சென்னை வேளாண் இயக்குனர் நேற்று திடீர் கள ஆய்வு மேற் கொண்டார்.திருச்சி மாவட்டம் லால்குடி வட்டாரத்தில் அப்பாதுரை கிராமத்தில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் 2018ன் கீழ், ஜான்மணி என்ற விவசா யின் வயலில் 10ஏக்கர் இயந்திர நடவிற்கான பாய் நாற்றங்காலில் நெல் விதைப்பு பணியையும், தாளக்குடி கிராமத்தில் தர்மலிங்கம் என்ற விவசாயியின் வயலில் 7.0 ஏக்கர் இயந்திர நடவிற்காக அமைக்கப்பட்டிருந்த பாய் நாற்றங்காலையும் சென்னை வேளாண்மை இயக்குநர் தட்சிணா மூர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் மற்றும் உளுந்து விதைகளையும், திரவ வடிவ உயிர் உரங்களையும் மற்றும் நெல்நுண்ணூட்ட உரங்களையும் வழங்கி 2018 குறுவை தொகுப்பு திட்டத்தினை விளக்கி கூறினார்.

மண்ணச்சநல்லூர் வட்டாரம் இருங்களூர் கிராமத்தில் மோகன் குமரவேல் என்ற விவசாயியின் வயலில் 1.5 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட் டிருந்த சொட்டுநீர் பாசனத்துடன் கூடிய நீடித்த நிலையான கரும்பு சாகுபடி வயலை பார்வையிட்டு அங்கு 90 சத மானியத்தில் அமைக்கப்பட்டிருந்த சூரிய சக்தி மோட்டார் இயங்குவதையும் பார்வையிட்டார்.
இருங்களுர் கிராமத்தில் ஆரோக்கியஸ்டிபன் வயலில் ஒரு ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டிருந்த தெளிப்புநீர் பாசன அமைப்பு, அதே விவசாயியின் வயலில் 2.5 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்டிருந்த மழை தூவுவான் கருவியையும் பார்வையிட்டார். அப்போது நுண்ணீர் பாசன அமைப்பால் தங்கள் சாகுபடியில் ஏற்பட்ட நன்மைகளை விவசாயிகள் வேளாண்மை இயக்குநரிடம் எடுத்துரைத்தனர். கள ஆய்வின்போது, திருச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் (பொ) பெரியகருப்பன், வேளாண்மை பொறியியல் துறை செயற் பொறியாளர் பிரசாத், உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் ரவி, வேளாண்மை துணை இயக்குநர் ராஜேஸ்வரன் , மற்றும் வேளாண்மை அலுவலர்கள் உடனிருந்தனர்

Leave A Reply

Your email address will not be published.