Modern technology gives us many things.

சைக்கிளில் ஆய்வு செய்யும் திருச்சி டிஐஜி – அதிர்ச்சியில் போலிஸ் !

RTI

சைக்கிளில் ஆய்வு செய்யும் திருச்சி டிஐஜி ஆனிவிஜயா – அதிர்ச்சியில் போலிஸ் !

BG Naidu

தமிழகத்தின் மையப்பகுதியான திருச்சியில் உயர் அதிகாரியாக பதவியில் இருப்பது என்பது மிகவும் பெருமைக்குரிய விசயம். இதை திருச்சியில் கடந்த காலம் உயர் அதிகாரிகளின் வரலாற்றே உணர்த்தும். திருச்சியில் உள்ள ஒரு அதிகாரியின் அதிரடியான செயல்பாடுகள் தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும். அந்த வகையில் தற்போது புதிதாக திருச்சி சரக டிஐஜியாக இருக்கும் ஆனி விஜயாவிற்கு முன்பு இருந்தவர் டிஐஜி பாலகிருஷ்ண் இவரின் அதிரடியான நடவடிக்கையினால் பொதுமக்களின் நன்பமதிப்பையும், சட்ட ஒழுங்கையும் தன் கைக்குள் வைத்திருந்தார்.

Ukr new

அந்த வகையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள டிஐஜி ஆனிவிஜயா பொறுப்பேற்ற முதல் நாளிலே அப்போது அவர் சொன்னதாவது: “இப்போதைக்கு கொரோனா காலகட்டம்… அதனால், போலீசார் – பொதுமக்களின் நல்லுறவு குறித்து தான் அதிக கவனம் செலுத்த உள்ளோம். எனவே உட்கோட்ட அளவில் அனைத்து போலீசாருக்கும் பொதுமக்களை நட்புடன் கையாள்வது எப்படி? என்பது குறித்த மேலாண்மை பயிற்சி அளிக்க இருக்கிறோம்.

Sathya

பொதுமக்களும் தயக்கமின்றி எந்நேரமும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து திருச்சி சரகத்தில் பணியாற்ற போகிறேன்.. “காவல்துறை உங்கள் நண்பன்” என்பதற்கு ஏற்ற வகையில் தான் எங்களது நடவடிக்கை இருக்கும். அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. என்று பேசினார்.  இது பொதுமக்களிடையே பெரிய நம்பிக்கை ஏற்படுத்தியது.

திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் திடீர்  தன்னுடைய முகாம் அலுவலக வீட்டில் இருந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு  தனியாக விமானநிலையம், செம்பட்டு, மாத்தூர் என புதுக்கோட்டை மாவட்ட எல்லை வரை சென்று அந்த பகுதியில் உள்ள செக்போஸ்ட் எப்படி செயல்படுகிறது என்பதை ஆய்வு செய்தார்.

 

இந்த பகுதியில் உள்ள காவல்நிலையங்களிலும் ஆய்வு செய்தார். உயர் அதிகாரிகள் பலரும் சைரன் கார்களில் வலம் இந்த் நேரத்தில் திடீர் என சைக்கிளில் ஆய்வுக்கு சென்றது போலிஸ் இடையே அதிர்ச்சியையும், மக்களிடையே ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Gold

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!