திருச்சியில் தொடரும் நகை பறிப்பு

0
ntrichy

திருச்சி கே.கே.நகர் குறிஞ்சி நகர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் முத்தையா மனைவி மல்லிகா (56). இவர் நேற்று காலை காய்,கறி வாங்க மளிகைக்கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது எதிரே பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் மல்லிகா கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: ரங்கம் வீரேஸ்வரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கடேசன் மனைவி ராஜேஸ்வரி (43). இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள பெயிண்ட் கம்பெனியில் கணக்காளராக வேலை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் ரெங்கபவனத்தில் உள்ள தோழி வீட்டிற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தபோது பின்னால் பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் ராஜேஸ்வரி கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றனர். ரங்கம் குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.