Modern technology gives us many things.

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து திருச்சியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் …

0 74
RTI

சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் தந்தை-மகன் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

 

 

 

சாத்தான்குளம் மனிதர்களான பென்னிக்ஸ் , அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் போலீஸ் காவலில் பொது உயிரிழந்தனர்.

 

 

இச்சம்பவத்திற்கு நீதி கேட்டும் உயிரிழப்புக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஜூன் 26ல் மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தார் .

 

 

 

Ukr new
Gold

திருச்சியில் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜ் அறிவுறுத்தலின்படி திருச்சி பெரிய கடை வீதி    n.s.p. ரோடு , தில்லை நகர் , மேலரண் சாலை ,  உறையூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன . போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை மகன் இருவரும் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மீது சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என வணிகர் சங்கப் பேரவை வலியுறுத்தியுள்ளது .

 

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் திருச்சி மாவட்ட தலைவர் ரவி முத்துராஜா இதுபற்றி கூறுகையில்,  காவல்துறையினரின் தாக்குதலால் தந்தை-மகன் இருவருமே உயிரிழந்ததுடன் வரம்பு மீறிய அராஜகத்தால் ஒரு குடும்பமே பாதித்துள்ளது . இதுதொடர்பாக தொடர்புடைய போலீசார் பணியிடை நீக்கம் செய்தாலும் அவர்கள் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் .

 

 

அரசு சார்பில் அவர்களின் குடும்பத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்து பயன்களும் விரைந்து கிடைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!