போக்குவரத்து காவலர்களுக்கு சன் கிளாஸ்  இணை காவல்துறை ஆணையர் மயில்வாகனன் !

0
ntrichy

போக்குவரத்து காவலர்களுக்கு சன் கிளாஸ்  இணை காவல்துறை ஆணையர் மயில்வாகனன் !

 

திருச்சி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு சன்கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்சி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் திருச்சி மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு கோடைகால வெப்பத்தில் இருந்து கண்களை பாதுகாப்பதற்காக தரமான சன்கிளாஸ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாநகர இணை காவல்துறை ஆணையர் மயில்வாகனன், திருச்சி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் எம்டிகே ராமலிங்கம் மற்றும் டாக்டர் ரோச் ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.

மலிவான விலையில் கிடைக்கும் கண்ணாடிகளை அணிவதாலும், வெப்ப கதிர்வீச்சினால் விரைவில் கண்புரை நோய் வருவதில் இருந்து கண்களை பாதுகாக்கவும், தரமான சன்கிளாஸ்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்திய தலைமை மருத்துவர்  அல்ட்ரா வைலட் கதிர்வீச்சினால் கண்கள் பாதிக்கப்படும் என்றும், இந்தியாவில் வெப்பம் அதிகமாக உள்ளதால் கோடைகாலத்தில் அனைவரும் அல்ட்ரா வைலட் கதிர்வீச்சினால் கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க நல்ல தரமான கண்ணாடிகளை அணியுமாறு கேட்டுக்கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய மாநகர இணை காவல்துறை ஆணையர் மயில்வாகனன், கோடைகாலத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதாலும், மாசு மற்றும் வண்டியில் வரும் கரும் புகையினால் கண்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைவரும் தரமான சன்கிளாஸ்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். மற்றும் வருடத்திற்கு ஒரு முறை அனைவரும் கண்பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.