திருச்சியில் திணறும் திருச்சபை; மீட்டெடுக்கும் முன்னாள் நீதிபதி

0
ntrichy

கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை (டி.இ.எல்.சி) நிர்வாகம் முறையான நிர்வாகம் இல்லாத காரணத்தினால் சீர்குலைந்த நிலையில் இருந்தது.
குறிப்பாக, பேராயர் (ஆன்மிகதலைவரும்), ஆலோசனை சங்கம் (நிர்வாக குழு) உள்ளிட்ட முக்கிய நிர்வாகக் குழு இல்லாமல் இருந்ததால், திருச்சபை ஸ்தம்பித்து இருந்தது.
எனவே, இதை சரிசெய்யும் முனைப்புடன், நீதிமன்றம் ஒய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமனை டி.இ.எல்.சி திருச்சபை நிர்வாகியாக நியமனம் செய்தது.
இதைத்தொடர்ந்து,பொறுப்பேற்றபின் நிர்வாகத்தை சரி செய்ய நிர்வாக்குழுவுக்கும், பேராயருக்கும் ஆகிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவித்தார்.

 

மேலும், 18 ஆண்டுகளாக கல்விக்கழகத்தில் நடைபெறாமல் இருந்த ஆசிரியர் நேர்முகத்தேர்வை கடந்த மே 29,30,31 உள்ளிட்ட தேதிகளில் நடத்திமுடித்துள்ளார். இதில், 1000க்கும்மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதற்கு முன்பு மறைந்த ஆ.மோசஸ் தம்பி பிள்ளை கல்விக்கழகத் தலைவராக இருந்தபோது தான் ஆசிரியர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற செயல்பாடுகளை பார்க்கும் திருச்சபை மக்கள், நிர்வாக ரீதியில் இத்திருச்சபை மீண்டெழும் என நம்பிக்கை கொண்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.