Modern technology gives us many things.

கொரோனோ புயலில் சிக்கிய திருவெறும்பூர் – உஷார் மக்களே !

0 8,875
RTI

கொரோனோ புயலில் சிக்கிய திருவெறும்பூர் – உஷார் மக்களே !

 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்தாலும், சென்னையில் இருந்து திருச்சி வந்தவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

 

திருச்சி மாவட்டத்தை கொரோனோ பாதிப்பில் திருவெறும்பூர்  முக்கிய இடத்தில் உள்ளது. திருவெறும்பூர் பகுதியில் மட்டும் 22 பேர் கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

 

Farm land sale

இந்த நிலையில் திருவெறும்பூர்  பூமிநாதன்(68) என்பவர் கொரொனோவால் பாதிக்கப்பட்டு  திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை இறந்தார்.

Gold

இதனை தொடர்ந்து திருவெறும்பூர் பகுதியில் கொரொனோவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

 

 

ஏற்கனவே நவல்பட்டு அண்ணாநகரை சேர்ந்த வைத்தீஸ்வரன், திருவெறுபூர் காவிரி நகரை சேர்ந்த விஜயன்  ஆகியோர் கொனோவால் இறந்தது குறிப்பிடதக்கது.

 

விஜயநகரம் பகுதியில் ஒரே பகுதியைச் சேர்ந்த 3  பேர். அதேபோல் துவாக்குடி அண்ணா வளைவு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரொனோ உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான்கோட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவருக்கு, கொரோனா அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் இருந்து வந்த அவரது மகள் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டதாக தெரிகிறது.

 

இப்படி திருவெறும்பூர் பகுதியை சுற்றி கொரோனோ என்னும் புயல் சுற்றிக்கொண்டிருக்கிறது. பொதுமக்கள் விழிப்புடன், பாதுகாப்புடன் இருப்பது நல்லது.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!