மருத்துவரின் தவறான சிகிச்சையால் மனைவி முளை சாவு – கணவர் குற்றச்சாட்டு

0
ntrichy

மருத்துவரின்
தவறான சிகிச்சையால் மனைவி முளை சாவு –
கணவர் குற்றச்சாட்டு

 

 

மருத்துவரின்
தவறான சிகிச்சையால் மனைவி முளை சாவு –
கணவர் குற்றச்சாட்டு மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்களால் பரபரப்பு

திருச்சி காட்டூரை சேர்ந்தவர் ஹக்கீம் . தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ஷாலியா (வயது 27) என்ற மனைவியும் 6 மாத கைக்குழந்தை உட்பட 3 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த 2004 ம் ஆண்டு
ஷாலியாவிற்கு இதயத்தில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் இதயக் குழாயில் அடைப்பு ஏற்படவே 7. 5. 2018 அன்று திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் (அப்போலோ) மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று காலை மருத்துவர்கள் ஷாலியாவிற்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக
கூறியதாக
கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரின் உறவினர்கள் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய
உறவினர்
லியாகத் அலி
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தான் ஷாலியாவிற்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.