உய்யக்கொண்டான் ஆற்று மேம்பாலத்தில் உயர வளரும் அரசமரம் அப்புறப்படுத்த கோரிக்கை

0
ntrichy

உய்யக்கொண்டான் ஆற்று மேம்பாலத்தில் உயர வளரும் அரசமரம்
அப்புறப்படுத்த கோரிக்கை

திருச்சி மாநகராட்சி கன்டோன்மென்ட் பகுதியில் உய்யக்கொண்டான் ஆற்று மேம்பாலம் வழியாக இருசக்கர வாகனம் இலகு ரக கனரக வாகனங்கள் ஆயிரக்கணக்கில் ஒவ்வொரு நாளும் செல்கின்றன அப்பாலத்தின் பக்கவாட்டில் அரச மரங்கள் வேர்விட்டு உயர வளர்ந்து வருகின்றன இதனால் பாலம் வலுவிழந்து வரக்கூடிய சூழல் உள்ளது.
மேம்பாலத்தின் கீழே உய்யகொண்டான் ஆறு ஓடுகிறது. பக்கவாட்டில் அரச மரம் பெரிதாக பெரிதாக காங்கிரீட் தளங்களில் விரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது இதனால் பாலம் பலவீனமாக வாய்ப்புகள் உள்ளது.


மேம்பாலங்களில் பெரும் விரிசல் ஏற்படும் முன், அதை தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் எடுக்க வேண்டும்’ என, அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.