வாழ்நாளில் மீதமுள்ள நாட்கள் மக்களுக்காக என்று கூறும் நடிகர்கள் காணாமல் போவார்கள் – கே.என்.நேரு பேச்சு

0
ntrichy

Image result for கே.என்.நேருதிருச்சி மாநகர் மலைக்கோட்டை பகுதி தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா திருச்சி தாராநல்லூரில் கொண்டாடப்பட்டது.

கூட்டத்திற்கு பகுதி செயலாளர் மதிவாணன் தலைமையேற்றார். மனோகரன், ராமலிங்கம் வரவேற்புரையாற்றினர். முன்னாள் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில், எம்.ஜி.ஆர். கட்சிக்காக 20 ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்து தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். இன்றைக்கு தன்வாழ்நாளில் மீதமுள்ள நாட்கள் மக்களுக்காக என்று அரசியல் கட்சி துவங்கிய மார்க்கெட் போன நடிகர்கள் முதல்வர் ஆக துடிக்கின்றனர். இவர்கள் காணாமல் போவார்கள்.

Image result for கே.என்.நேருஅனைத்து தரப்பு மக்களும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் தலைமை அரசால் அதை தீர்க்க முடியவில்லை. அவர்கள் ஆதரவாளர்கள் இடையே மோதல் நடந்த வண்ணம் உள்ளது. பணம் இருந்தால் அரசு வேலை உறுதி என்ற சூழல் நிலவுகிறது. கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றியோ தோல்வியோ திமுகவினர் போட்டியிட வேண்டும். ஒருதலைபட்சமாக கூட்டுறவு துறை அதிகாரிகள் நடந்துகொண்டால் பின்வரும் காலங்களில் தண்டிக்கப்படுவீர்கள். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். வரும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வராவார் என்றார்.

சபாபதி மோகன், அன்பில் பொய்யாமொழி, அன்பழகன், அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.