திருநங்கைகள் திருச்சி கலெக்ட்ரை முற்றுகையிட்டு மனுகொடுத்ததால் போலிசார் தடுத்ததால் சற்று பரபரப்பு ஏற்ப்பட்டது.

0
ntrichy

திருநங்கைகள் திருச்சி கலெக்டரை முற்றுகையிட்டு மனுகொடுத்ததால் போலிசார் தடுத்ததால் சற்று பரபரப்பு ஏற்ப்பட்டது.

அனைத்திந்திய அரவாணிகள் உரிமைகள் மற்றும் மறுவாழ்வு மையம் சார்பில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் 100-க்கும் மேற்பட்டோர் அதன் தலைவர் மோகனா தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் நின்ற போலீசார் அவர்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினார்கள். கூட்டமாக செல்ல அவர்களுக்கு அனுமதி இல்லை என்றதால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்த திருநங்கைகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த கலெக்டரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

அந்த மனுவில், “எங்கள் அமைப்பு 2002-ம் ஆண்டு முதல் திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் திருநங்கைகளுக்கான அரசின் நலத்திட்டங்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் பயன்பெறவில்லை. வயதான திருநங்கைகளுக்கு முதியோர் உதவித்தொகை ஓராண்டாக வழங்கப்படவில்லை. 500-க்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில் 50-க்கும் குறைவானவர்கள் மட்டுமே அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் திருநங்கைகள் அதிக அளவில் வசிப்பதால் அவர்களுக்கு தமிழக அரசின் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கி தர வேண்டும். படித்த திருநங்கைகளுக்கு படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்” என்று கூறி இருந்தனர்.

(தினத் தந்தி)

Leave A Reply

Your email address will not be published.