உஷாவின் சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் மீது கொலைவழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

0
ntrichy

திருச்சி திருவெறும்பூர் வாகன சோதனையின்போது இன்ஸ்பெக்டர் தாக்கியதால் உயிரிழந்த உஷாவின் சாவுக்கு காரணமான இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணிகளை புறக்கணித்து நீதிமன்ற வளாகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வழக்கறிஞர்கள் சங்க தலைவர் பன்னீர்செல்வம் தலைமையேற்றார்.  ஜெயசீலன், கமாலுதீன், சதீஷ்குமார், ஆதிநாராயணன், போஜகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், இன்ஸ்பெக்டர் காமராஜின் செயல் மனித உரிமை மீறலாகும், இதுதொடர்பாக போராட்டம் நடத்திய 23 பேர் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறவும், வக்கீல்கள் சிவசங்கரன், பொன்.முருகேசன், ஆதிநாராயணமூர்த்தி ஆகியோர் மீது பொய்வழக்கு போடப்பட்டதை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.