மே 8 ஆம் தேதி திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்-அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் குருசாமி

0
ntrichy

மே 8 ஆம் தேதி திருச்சியில் உண்ணாவிரத போராட்டம்-அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் குருசாமி

 

 

திருச்சியில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகள் சார்பில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் காவிரி நீர் பாசன விவசாயிகள் சங்கம்,இந்திய விவசாயிகள் சங்கம்,ஏரி மற்றும் ஆற்று பாசான விவசாயிகள் சங்கம்,உழவர் உழைப்பாளர் கட்சி உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் இன்றைய உச்ச நீதி மன்ற உத்தரவு குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டத்திற்க்கு பின் அக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் குருசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.அதில்

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம்,மத்திய அரசின் போக்கு கண்டனத்திற்குரியது.இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சரியாக செயல்படவில்லை என குற்றம்சாட்டினார்.தொடர்ந்து அவர் பேசும் போது

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும்,ஏப்ரல்,மே மாதங்களில் 4 டி.எம் சி தண்ணீரை உடனடியாக திறக்க வலியுறுத்தியும் வரும் மே 8 ஆம் தேதி திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம் என்றார்.

பேட்டி: குருசாமி,ஒருங்கிணைப்பாளர் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டு நடவடிக்கை குழு

Leave A Reply

Your email address will not be published.