கட்டிடம் இங்கே, பார்க்கிங் எங்கே?

0
ntrichy

கட்டிடம் இங்கே, பார்க்கிங் எங்கே?

சத்திரம் பேருந்து நிலையம் சமயபுரம் செல்லும் பேருந்துகள் உள்ளே போகும் வழி

போக்குவரத்து மட்டும் கூட்டநெரிசலை தடுக்கும் விதமாக மலைக்கோட்டையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் இறங்கியுள்ளது திருச்சி மாநகராட்சி. ஒரு வகையில் அது சரியான முடிவு தான் என்றாலும், அந்த கடைகளில் பெரும்பாலானவை ஒரு நாளைக்கு ரூ.300 முதல் ரூ.500 வரையில் சம்பாதிக்கக்கூடிய அளவிற்கு உள்ள சிறு மற்றும் குறு வணிகம்செய்யக்கூடிய கடைகளே, இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாராம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

என்.ஸ்.பி ரோடு

போக்குவரத்து நெரிசலுக்கும், கூட்டநெரிசலுக்கும் ஆக்கிரமிப்பு இடங்கள் மட்டும் தான் காரணமாக என்று பார்த்தால் நிச்சயம் கிடையாது, அவற்றில் முக்கிய பங்கு பார்க்கிங் இல்லாத பெரிய கடைகளுக்கும் வணிக வளாகங்களுக்கும் பங்கு உண்டு. திருச்சியைப் பொறுத்தரையில், சத்திரம்பேருந்து நிலையம், தில்லைநகர், பட்டாபி ராமன் சாலை, தென்னூர் ரோடு, மலைக்கோட்டை தெப்பக்குளம் கடைத்தெருவில் உள்ள பெரிய, பெரிய ஜவுளிகடைகள், வயலூர்ரோடு, அமெரிக்கன் மருத்துவமனை எதிரில் உள்ள வணிக வளாகம் உள்ளிட்ட இடங்களில் முறையாக பார்க்கிங் வசதியில்லாததால், இருசக்கர வாகனங்கள் முதல் நான்குசக்கர வாகனங்கள் வரையில்ரோட்டில் நிறுத்தும் நிலையே ஏற்பட்டுள்ளது. இன்னும் பல வணிக வளாகங்களில் பார்க்கிங் பகுதி என மாநகராட்சியிடம் காண்பித்த இடங்களிலும், லாப நோக்குடன் கடைகள் கட்டி வாடகைக்கு விட ஆரம்பித்துவிட்டனர்.

மத்திய பேருந்து நிலையம்

மக்களின் வரிப்பணத்தைகொண்டு மக்களின் பயன்பாட்டிற்காகபோடப்படும்  சாலைகளை பல இடங்களில் காவல் துறையினரே தனியார் வணிக வளாகங்களுக்கு பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கிக்கொடுக்கின்றனர்.ரோட்டில் வாகனங்ளை நிறுத்துவோருக்கும், ஆக்கிரமிப்பு இடங்களில் வியாபாரம்செய்வோருக்கும் அபராதம் விதிக்கும் மாநகராட்சி. பார்க்கிங் வசதி இல்லாத வணிக வளாகங்களுக்கு அனுமதி அளித்ததுமட்டுமின்றி, சாலைகளை தங்களுக்கான பார்க்கிங் ஏரியாவாக எடுத்துக்கொள்ளும் பெரிய வணிக வளாகங்கள் மீது அபராதம் விதிக்காது ஏன்? மாநகராட்சிகளைப்பொறுத்தவரையில், பொறியாளர் பிரிவுக்கும், வருவாய் பிரிவுக்கும் அதிக அளவில் வருவாய் வருகிறது.

இந்த இரு துறைகளும் இன்றி மாநகராட்சியில் எந்த ஒரு புதிய கட்டிடங்களும் கட்டமுடியாது. அவ்வாறாக கட்டக்கூடிய வணிகவளாங்களுக்கு சதவீத அடிப்படையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக அனுமதி வழங்கியும், விதிமுறைகளை கண்டு கொள்வதில்லை என்றும் தொடர்ந்து குற்றச்சாட்டு வந்த வண்ணமே இருக்கிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் மத்தியபேருந்து நிலையத்தில் அபிராமிஹோட்டல் பார்க்கிங்காக இரு வழிசாலையை ஒருவழிசாலையாக மாற்றுவது, டேப் காம்பிளஸ்க்கு வருவோர் அங்கு இருக்கும் பேருந்து நிறுத்தத்தை சுற்றிலும் வாகனங்ளை நிறுத்தி பயணிகளுக்கு இடையூறுசெய்கின்றனர்.

ஆனால், இருப்பவர்களை ஒன்றும் செய்யாமல் சாலையில் வாகனங்கள் நிறுத்த அவர்களுக்கு உதவுவது, தென்னூர் மற்றும் பட்டாபிராமன் சாலையில் இருபுறங்களிலும் வாகன நிறுத்த வசதிகளை ஏற்படுத்தி தருவது, சாரதாஸ் ஜவுளிக்கடைக்கு முன்னே வாகனங்களை நிறுத்த அனுமதிப்பது, சத்திரம்பேருந்து நிலையத்தில் உள்ளபெரியசாமி டவர்ஸை சுற்றிலும் சாலைகளை ஆக்கிரமிக்கும் வகையில் வாகனங்களை பார்க்கிங் செய்து கொள்ளச்செய்வது என காவல்துறையினர் அனுமதித்தும், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டு இருப்பதையும்  திருச்சியைச்சுற்றிலும் பார்க்கமுடிகிறது.

லஞ்சம் வாங்கிக்கொண்டு எந்த  ஒரு முறைகேடான செயலுக்கம் உறுதுணையாக நிற்கும் மாநகராட்சி, சில நாட்களுக்கு முன்பு 200 பேர் வரிசெலுத்தவில்லை என்று திருச்சி மாநகராட்சி வருவாய்த்துறை பெயர் பட்டியல் வெளியிட்டுள்ளது. லஞ்சம் கொடுத்தால் எப்படியும் தப்பித்து விடலாம் என ஆகியதன் விளைவே இந்த 200 பேர் கொண்ட பட்டியல், இனியாவது, முறையான விதிமுறைகளுடன் கட்டிடங்கள் கட்டுவதற்கும், பார்க்கிங் இல்லாத வணிக வளாகங்களுக்கு அனுமதியை ரத்துசெய்தோ அல்லது மாற்று ஏற்படுகள்செய்யச்சொல்லி மாநகராட்சி வற்புறுத்தவேண்டும். மக்களுக்குக்காவே மாநகராட்சி என்பதை உணர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பணியாற்றவேண்டும்.

-நிருபர்கள் குழு

Leave A Reply

Your email address will not be published.