லால்குடியில் டாஸ்மாக் பார்  மூடப்பட்டது

0
ntrichy

லால்குடியில் டாஸ்மாக் பார் மூடப்பட்டது

திருச்சி மாவட்டம் லால்குடி வடக்கு அய்யன் வாய்க்கால் பழைய பூங்காவனம் திரையரங்கம் அருகில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளது. இங்கு அரசு அனுமதியுடன் டாஸ்மாக் பார் செயல்பட்டு வந்தது. டாஸ்மாக் கடைக்கு வரும் குடிமகன்கள் மது பாட்டிலை வாங்கி கொண்டு கடை முன்புள்ள பொதுமக்கள் செல்லும் பாதையில் அமர்ந்து குடித்து வந்தனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்
இந்நிலையில் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்ய கடந்த 7ம் தேதி லால்குடிக்கு வந்த திருச்சி கலெக்டர் ராசாமணி அமர்ந்திருந்த கார் லால்குடி ரயில்வே மேம்பாலம் வழியாக சர்வீஸ் சாலையில் சென்றது. அப்போது டாஸ்மாக் வெளியே உள்ள பகுதியில் அமர்ந்து கொண்டு பொதுமக்களுக்கு இடையூறாக குடிமகன்கள் மது அருந்தி கொண்டிப்பதை கலெக்டர் ராசாமணி கண்டு கோபமடைந்தார். உடனடியாக அந்த டாஸ்மாக் பாரை மூட டாஸ்மாக் உயரதிகாரிக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத்தொடர்ந்து டாஸ்மாக் பார் உடனே மூடப்பட்டது. மேலும் பாரில் உள்ள சுவர்களில் பார் க்ளோஸ்டு என நோட்டீஸ் ஒட்டினர். பார் மூடப்பட்டதால் டாஸ்மாக் கடைக்கு சென்ற குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு குடிக்க இடம் இல்லாத காரணத்தால் ஏமாற்றத்துடன் சென்றனர். குடிமகன்கள் சிலர் பாட்டிலை வாங்கி மீண்டும் வெளியில் அமர்ந்து குடித்தனர். இதனை கண்ட பார் ஊழியர்கள் அவர்களை கண்டித்து எச்சரித்து அனுப்பினர். டாஸ்மாக் பார் மூடப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.