ஜமால் முகமதுகல்லூரியில் “சிம்போரியா 2019”

0
நம்ம திருச்சி-1

ஜமால் முகமதுகல்லூரியில்,முதுகலைமற்றும் ஆராய்ச்சிவேதியியல் துறையில் “சிம்போரியா 2019”என்றதலைப்பில்மாநிலஅளவில்  கல்லூரிகளுக்கிடையிலானஒருநாள் சிந்தனைஅரங்கம் கடந்த 13ம் தேதி நடைபெற்றது.

 

முனைவர்.எம்.முகமதுசிகாபுதீன், கூடுதல் துணைமுதல்வர் மற்றும் வேதியியல் துறைதலைவர்அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.உள்ளுர் மற்றும் வெளிமாவட்டத்தில் உள்ள 18 கல்லூரிகளிலிருந்துசுமார் 250 மாணவ,மாணவிகள் இவ்விழாவில் கலந்துக்கொண்டனர்.மாணவ,மாணவியர்களுக்கிடையில் பல்வேறுஅறிவுப்பூர்வமானநிகழ்வுகள் நடத்தப்பட்டது.

 

நிகழ்ச்சியின் முடிவில் செயலர் மற்றும் தாளாளர்முனைவர் ஏ.கே. காஜா நஜிமூதீன் சாஹிப்,பொருளாளர் ஜனாப் எம்.ஜே.ஜமால் முகம்மதுசாஹிப் மற்றும் முனைவர் கே. அப்துஸ் சமத்,துணைசெயலர்,முனைவர். எஸ். இஸ்மாயில் முகைதீன்,முதல்வர் ஆகியோர் கலந்துக்கொண்டு வாழ்த்துரை வழங்கி பல்வேறு நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கலைமற்றும் அறிவியல் கல்லூரி ஒட்டுமொத்தபரிசுக்கோப்பையைதட்டிச்சென்றது. சுயநிதிப்பிரிவு இயக்குநர் முனைவர்.கே.என்.அப்துல் காதர் நிகால்,விடுதி இயக்குநர்கள்முனைவர் கே.என். முகம்மத் பாசில் மற்றும் எம்.ஏ.ஜமால் முகமதுயாசின் ஜுபைர் ஆகியோர் கலந்துகொண்டு சிந்தனைஅரங்கினை சிறப்பித்தனர்.

 

 

விழாவிற்கான ஏற்பாடுகளை முனைவர்.மெ.புருஷோத்தமன், உதவிப் பேராசிரியர்,வேதியியல் துறை சிறப்பாக செய்திருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.