Modern technology gives us many things.

திருச்சியின் அடையாளங்கள்….2

இப்ராஹிம் ராவுத்தர்

0 207
RTI

ஒவ்வொரு வாரமும் திருச்சியின் அடையாளங்கள் பகுதியில் திருச்சியின் ஆளுமைகள் குறித்த விபரங்களை பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஆளுமைகள் வரிசையில் இந்தவாரம் .இப்ராகிம் ராவுத்தர் குறித்து திருச்சியின் அடையாளங்கள் பகுதியில் பார்ப்போம்.

திருச்சி கல்யாணிகவரிங் பேருந்து நிறுத்தம் அருகே இப்ராஹிம் பூங்கா உள்ளது. இங்கு வாரவிடுமுறை நாட்களில் திருச்சி வாசிகள் மட்டுமல்லாமல் வெளியூர்காரர்களும் வந்து குழந்தைகளை விளையாட விட்டு அழைத்துச்செல்வது வழக்கம். இங்குள்ள மரம், செடி, கொடி என விதமான பூஞ்செடிகள் அருகே நின்று போட்டோ எடுத்துக்கொள்ள பலர் ஆர்வம் காட்டுவதை தினமும் காணலாம். திருமணமான புது தம்பதிகளின் போட்டோ ஸூட்டுக்கு அதிகம் விருப்பப்படும் இடமாக தற்போது மாறி உள்ளது. ஆனால் நம்மில் பலருக்கு அந்த பூங்கா தாங்கியிருக்கும் பெயர் குறித்து விபரங்கள் தெரிவதில்லை.

திருச்சியின் வளர்ச்சிக்கும் மக்களுக்கு பல்வேறு வகையில் உந்து சக்தியாக இருந்தவர் இப்ராஹிம் ராவுத்தர். திருச்சி நகரில் பல்வேறு துறைகளில் புகழ் பெற்றவர்களில் இவரும் ஒருவர். மிகப்பெரிய தொழிலதிபர், திருச்சியில் தொழில் தந்தையாக மக்களால் அழைக்கப்பட்டவர்.

Farm land sale

இப்ராஹிம் ராவுத்தர் திருச்சியின் பல்வேறு பதவிகளில் இருந்தவர், 1928-31 இருந்து
1925-28 வரை தலைவர் மற்றும் அதன் நகராட்சி துணைத் தலைவர் என பல பதவிகளை வகித்துள்ளார். இவர் நகராட்சி பதவியில் இருந்த காலத்தில் முதல்முறையாக திருச்சி நகராட்சியில் பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து, ஊதியம் வழங்கினார்.
கூடவே தனது சொந்த நிலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டும் பயன்படுத்தவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மேலபுலிவார்டு சாலையில் உள்ள இடத்தில் பூங்கா அமைக்க நிலம் கொடுத்தார். அந்த இடம்தான் அவரின் நினைவாக இப்ராஹிம் பார்க் என விளங்குகிறது.கூடவே காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பெரிய வளைவும் இவரின் பெயரை தாங்கியே நிற்கிறது.

இப்ராகிம் ராவுத்தரின் அப்பா காசிப்பா,திருநெல்வேலி மாவட்டம், எட்டயபுரத்தில் இருந்து திருச்சிக்கு குடிபெயர்ந்தவர், 1885ம் ஆண்டு ராவுத்தர் பிறந்தார், எம்.கே.எம். முகமது இப்ராஹும் ராவுத்தர் என்பது இவரது முழுப்பெயர். 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலகட்டத்திலேயே, இப்ராஹிம் ராவுத்தர் குடும்பம், திருச்சி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 18 மண்ணெண்ணெய் பங்க் வைத்திருந்தார்கள். இவர்களுக்கு சொந்தமாக சமயபுரம் மற்றும் மருதூர் அருகே விவசாய நிலங்களில் சுமார் 500 ஏக்கர் இருந்தது. மிகப்பெரிய செல்வந்தராக வாழ்ந்த இவர், அந்தகாலத்திலே திருச்சியில் இருந்து இங்கிலாந்த், பிரான்ஸ், ஜெர்மனி என பல நாடுகளுக்கு தோல் ஏற்றுமதி செய்து வியபாரம் செய்யும் அளவுக்கு வணிகத்தில் வளர்ந்தார்கள். இந்தியாவில் மண்ணெண்ணை பங்குகள் மூடப்பட்டபோது, இப்ராஹிம் ராவுத்தர் குடும்பம், மதுரையில் டவுன்பஸ்ஸை துவங்கியவர்,

Gold

திருச்சி துறையூர், நாமக்கல் என பல பகுதிகளுக்கு பேருந்து இயக்கினார்கள். கூடவே கட்டுமான தொழிலில் கொடிகட்டி பறந்தார்கள். அதில் இவரின் நிறுவனம்
ஈரோடு ரயில்வே ஜங்ஷன், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை, ஆந்திராவில் உள்ள காக்கிநாடா துறைமுகம் என பல கட்டிடங்கள் இதற்கு சான்றாக விளங்குகிறன. இவருக்கு சொந்தமாக திண்டுக்கல், கொடைக்கானல் மற்றும் குற்றாலம் என பல ஊர்களில் பேலஸ் மாளிகைகள் இருந்தன.

இப்போது திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மிகப்பெரிய பங்களா, திருச்சியின் மிக சிறந்த கட்டிடக்கலைக்கு சான்றாக மிகபிரமாண்டமானதாக விளங்குகிறது. பேலஸ் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த வீடுகளில், கூரைகள், பதிக்கப்பட்டுள்ள கண்ணாடி கிரானைட் சுவர்கள் என அழகாய் காட்சி அளிக்கிறது.

இந்த வீட்டில் டிசம்பர் மாதம் பூக்கும் டிசம்பர் பூ இப்போதும் அழகாய் பூக்கிறது. இப்ராகிம் ராவுத்தர், தங்கள் குழந்தைகள் எப்போதும் ஒற்றுமையாக வாழவேண்டும் என வடிவமைக்கப்பட்ட வீடுகள், குடும்பங்கள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்கான உதாரணம்.
கூடவே இவர் கடந்த 1940ம் ஆண்டு டிசம்பர் 2-ம்தேதி இந்த உலகை விட்டு மறைந்தார்.
அவர் மறைவுக்காக திருச்சி முழுக்க பொதுமக்கள் கடைகளை மூடி துக்கம் அனுசரித்ததும், அவரது உடல் பாலக்கரையில் இருந்த அவரது வீட்டுக்கு அருகே அடக்கம் செய்யவேண்டும் ஆனால், பொதுமக்கள் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல், அவர்களுக்காக மெயின்கார்டு கேட், NSB சாலை, பாலக்கரை என ஊர்வலமாக எடுத்து சென்று மீண்டும் பாலக்கரையில் அடக்கம் செய்த வரலாறு உண்டு.

இவருக்கு சனாப் எம்.கே.எம்.அப்துல் சலாம், அப்துல் ஹக்கீம், அப்துல் பஷீர் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள். இவர்கள் பிள்ளைகள் உலகின் பல பகுதிகளில் வாழ்கிறார்கள். இப்போதும் இவர்கள் குடும்பத்தினர் வருடத்திற்கு ஒரு ஒன்றுகூடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள்.
அவரது மூத்த மகன் M.K.M.அப்துல்சலாம், மேலவை பிரதிநிதியாகவும், 1957-ம் ஆண்டு திருச்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். காமராஜர், இந்திராகாந்தி உள்ளிட்ட மிகப்பெரிய தலைவர்களுடன் நெருக்கமாக விளங்கினார்.

இப்படிப்பட்ட ஆளுமையை அவர் மறைந்த இதே டிசம்பர் மாதத்தில் நம்ம திருச்சி இதழ் பதிவு செய்வதில் மிக மகிழ்ச்சி அடைகிறது.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!