சமூக விரோதிகளுக்கு சாதகமான சப்வே

0
ntrichy

திருச்சியில் இருந்து புறவழிச்சாலையை இணைக்கும் வகையில் காவிரிப்பாலம் அருகில் ஓடத்துறை ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சென்னை புறவழிச்சாலை செல்லும் பகுதியில் ஓயாமாரி சுடுகாடு, ரயில்வே கிராசிங் இருப்பதால் மக்களின் பயன்பாட்டிற்காக பாலத்தை ஒட்டியே சப்வே கட்டப்பட்டது. ரயில்வே நிர்வாகம் இதன் மின்விளக்குகளை அமைத்துத்தந்தது.

பாலத்தில் சவ ஊர்வலங்கள் செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்படும். அதனால் இந்த சப்வே கட்டப்பட்டது.  தற்போது இந்த பாலத்தில் உள்ள விளக்குகள் சமூக விரோதிகளால் திருடப்பட்டு அந்த பகுதி இருட்டாகவே உள்ளது. இரவு நேரங்களில் மின்விளக்கு வசதியில்லாதது சமூக விரோதிகளுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. எனவே போலீசார் விளக்குகளை திருடும் சமூக விரோதிகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே  மக்களின் எதிர்பார்ப்பு.

Leave A Reply

Your email address will not be published.