பாம்பை கண்ட அதிர்ச்சியில் மயங்கிய பள்ளி மாணவிகள்

0
ntrichy

பாம்பை கண்ட அதிர்ச்சியில் மயங்கிய பள்ளி மாணவிகள்: இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் நேரில் சென்று நலம் விசாரிப்பு..அன்னவாசல்,ஜீன்,19: பாம்பை கண்ட அதிர்ச்சியில் மயங்கி அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவிகளை இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார்..
பின்னர் செய்தியாளர்களிடம் இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் க.குணசேகர கூறியதாவது:புதுக்கோட்டை மாவட்ட இரா.வனஜா உத்தரவின் பேரில் இங்கு வந்து உள்ளேன். அன்னவாசல் ஒன்றியம் குப்பத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றார்கள்.. மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த பொழுது மரத்தின் மேல் விஷமற்ற பாம்புகள் மூன்று மரத்தின் மேல் விளையாடிக் கொண்டு இருந்துள்ளது…அப்பொழுது அந்த பாம்புகளின் எச்சம் பட்டதாலும் மாணவர்கள் பாம்பை நேரில் கண்ட அச்சத்தாலும் மயக்கமடைந்துள்ளனர்..உடனடியாக மயங்கிய ஐந்து மாணவர்களும் ஆம்பூலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு அன்னவாசல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்..தற்பொழுது மாணவர்களுக்கு இரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளும் நடத்தப்பட்டு உள்ளது..மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.மாணவர்கள் பாம்பை நேரில் கண்ட பயத்திலேயே மயங்கி உள்ளனர்..தற்பொழுது மாணவர்கள் நலமுடனே உள்ளனர்..தற்பொழுது மாணவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருவதால் நாளை அனைத்து மாணவர்களும் வீடு திரும்புவார்கள் என்றார்..
பார்வையின் போது இலுப்பூர் கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் (பொறுப்பு) கி.வேலுச்சாமி,அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர் அரு.பொன்னழகு,வட்டார வளமைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.