மாணவர்களுக்கு கல்வியே ஆயுதம் ! பூ.கோ. சரவணன் IRS – சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியில்.. 

1
நம்ம திருச்சி-1

மாணவர்களுக்கு கல்வியே ஆயுதம் – பூ.கோ. சரவணன் – சமயபுரம் எஸ்.ஆர்.வி. பள்ளியில்..

கல்வியே நமக்கான ஆயுதம் நன்றாக படியுங்கள் என்று எஸ்ஆர்வி பள்ளியில் நடந்த கனவு மெய்ப்பட நிகழ்ச்சியில் பூ.கோ.சரவணன் ஐஆர்எஸ் பேசினார்.

சமயபுரம் எஸ்.ஆர்.வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் கனவுமெய்ப்பட நிகழ்வில் பூ.கோ.சரவணன் ஐஆர்எஸ் கலந்து கொண்டு,  பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவிருக்கும் மாணவர்களிடையே பேசும் போது.

மாணவ பருவத்தில் பள்ளிப்படிப்பு என்பது மிக முக்கிய காலகட்டம். பள்ளிக் கல்வியின் இறுதி பொதுத் தேர்வு முடிந்ததும், தங்கள் எதிர்காலத்திற்கான படிப்பினை தேர்வு செய்து பல்வேறு துறைகளை நோக்கி செல்வதற்கு பள்ளிக் கல்வியே அடிப்படை. பொதுத் தேர்வில் வாங்கும் மதிப்பெண் என்பது கல்லூரி வாழ்க்கைக்குள் செல்வதற்கான ஒரு வாசல் மட்டுமே. அது ஒரு கதவு தான்.

பூ.கோ.சரவணன். ஐ.ஆர்.எஸ்.

மற்றவருக்காக அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்று நினைக்காமல் உங்களுக்காக உங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் நன்றாக படித்து தேர்வு எழுதுங்கள். நான் வெற்றி பெற்றால் போதாது என்னோடு என் சமூகமும் வெற்றிப்பெற வேண்டும் என்று சிந்தியுங்கள்.

 

கல்வியே நமக்கான ஆயுதம் நன்றாக படியுங்கள். தேர்வு எழுதி வெல்லுங்கள். கல்வியைக் கொண்டு இந்த சமூகத்தை அறம் சார்ந்த சமூகமாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையோடு செயல்படுங்கள் என்றார்.

 

பள்ளியின் தலைவர் ராமசாமி, செயலர் சுவாமிநாதன், பொருளர் செல்வராஜன், துணைத்தலைவர் குமரவேல், இணை செயலர் சத்யமூர்த்தி, பள்ளியின் முதல்வர் துளசிதாசன் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

1 Comment
  1. Kanahu Muthiah says

    Send all breaking news to my mail

Leave A Reply

Your email address will not be published.