Modern technology gives us many things.

ஸ்ரீரங்கம் சந்துரு தலையை வெட்டி கொலை ஏன் ?

0 8,943
RTI

ஸ்ரீரங்கம் சந்துரு தலையை

வெட்டி கொலை ஏன் ?

 

ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் இன்று காலை பிரபல ரவுடி சந்திரமோகன் என்பவர் தேவிபாலா தியேட்டரில் இருந்து பாலத்தில் வழியே டூவிலரில் சென்ற போது  காரில் வந்த  கும்பல் மறித்து தலையை மட்டும் தனியே வெட்டி கொலை செய்த மூன்று பேரும் காரிலே தலையை எடுத்து சென்று ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில்  சரணடைந்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Farm land sale

Gold

ஸ்ரீரங்கம் சந்திரமோகன் என்கிற தலைவெட்டி சந்துரு உதயநிதி ரசிகர் மன்றத்தில் பொறுப்பாளராக இருந்தவர்.   சந்துரு மீது கொலை, திருட்டு மற்றும் வழிப்பறி என ஸ்ரீரங்க காவல்நிலையத்தில் மட்டும் 23 வழக்குகள், உறையூர் காவல்நிலையத்தில் 4 வழக்கும், எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் 1 வழக்கும் கண்டோன்மென்டில் 1 வழக்கும், தில்லைநகரில் 2 வழக்கும், தஞ்சாவூரில் 1 வழக்கும், விராலிமலையில் 1 வழக்கு உள்ளிட்ட 33 வழக்குகள் உள்ளது. இதனால் குண்டாஸ் வழக்கு இவர் மீது போடப்பட்டது.

 

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு பால்காரர் ஒருவரின் தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு சென்று விட்டதால் இவரை இப்பகுதி மக்கள் தலைவெட்டி சந்திரமோகன் என்று அழைத்து வந்தனர்.  இவருக்கு இப்பகுதியில் முன்விரோதம் அதிகம் இருந்து வந்தது இந்நிலையில் 28.04.2020 காலை  ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் டூவிலரில் சென்று கொண்டிருந்த போது ஸ்ரீரங்கம் ரயில்வே டிரைனேஜ் தெருவில் வசிக்கும் அண்ணன் தம்பிகள்
சுரேஷ் (35) சரவணன் (30) இவர்கள் இருவரும்  மற்றொருவர் செல்வகுமார் (25)             3 பேரும் காரில் வந்து ஸ்ரீரங்கம் ரயில்வே பாலத்தில் வழிமறித்து
சந்திரமோகன் தலையை துண்டித்தனர். பின்னர் அதே காரில் தலையுடன் ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் மூன்று பேரும் சரணடைந்தனர்.  இதுகுறித்து காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.

error: Alert: Content is protected செய்திகளை நகல் எடுக்க வேண்டாம். எங்கள் லிங்கை பகிருங்கள். !!